‘கூச்சிங் வெடிப்புக்கு பயங்கரவாத, குற்றவியல் தொடர்பு இல்லை’

கூச்சிங்: மலேசியாவின் கூச்சிங் நகரில் அமைந்துள்ள ‘சிட்டிஒன் மெகாமால்’ கடைத்தொகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட வெடிப்புச் சம்ப வத்தில் பயங்கர வாதம் அல்லது குற்றவியல் அம் சங்களுக்கு தொடர்பு இல்லை என்று சரவாக் போலிஸ் துணை ஆணையர் (டிசிபி) முகம்மது ஸுரைடி இப்ராஹிம் தெரிவித்து உள்ளார். இந்த வெடிப்புச் சம்ப வத்தில் மூன்று ஆடவர்கள் உயிரிழந் தனர். மேலும் 26 பேர் காயமடைந்த னர். அவர்களில் எழுவர் மருத் துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் கூறப்படு கிறது. வெடிப்புக்கான காரணம் குறித்து தீயணைப்பு, மீட்புப் பிரிவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக டிசிபி ஸுரைடி கூறினார்.

“வெடிப்பு நிகழ்ந்தபோது கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளை வைத்தும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை வைத்தும் பார்க்கையில், இச்சம்பவத்தில் பயங்கரவாத அம்சம் எதுவும் இல்லை எனத் தெரிய வருகிறது,” என்றார் அவர். இச்சம்பவத்திற்கு எரிவாயு வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வரும் வேளையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட ஆய்வுக்கூடத் திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கடைத்தொகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்து நேற்று அந்த உணவகம் திறக்கப் பட இருந்த வேளையில் அங்கு திடீ ரென வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.