‘சட்டத்திற்கு உட்பட்டே ஆலய நிலப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்’

ஷா அலாம்: சட்டத்திற்கு உட் பட்டு சீஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிலப் பிரச் சி னையைத் தீர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் மலேசியாவின் சிலாங்கூர் மாநில முதலமைச்சர் அமிருதீன் ஷாரி நினைவூட்டினார். இது குறித்துப் பேசிய அவர், தொழிலதிபர் வின்சென்ட் டான் கோயில் நிலத்தை வாங்குவதற்கு இதுவரை இரண்டு மில்லியன் ரிங்கிட் நிதி திரட்டப்பட்டுவிட்ட தாகக் கூறியதை அமைச்சர் அமிருதீன் சுட்டினார்.

அப்படி ஒரு வேளை நிலத்தை வாங்கும் நிலைமை ஏற்பட்டால் சட்டத்தின் கீழ் சில நடைமுறை களைச் செயல்படுத்த வேண்டி இருக்கும் என அவர் எடுத்து ரைத்தார். அத்துடன், கோயில் விவகாரத்தில் மாநில அரசு நடு நிலையாக செயல்பட்டு வரு வதை யும் அவர் சுட்டினார். இந்நிலையில், நிலத்தை விற் பது குறித்து கோயில் நில உரிமை யாளரிடமிருந்து இதுவரை யிலும் எவ்வித பதிலும் பெறப்படவி ல்லை என்று அமைச்சர் அமிருதீன் தெரிவித்தார். “எல்லா நேரங்களிலும் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த இயலாது. ஆனால், இவ்விவகாரம் குறித்து சிறந்த முடிவை மாநில அரசு எடுக்கும்,” என அவர் உறுதியளித்தார்.