நியூ கலிடோனியாவில் கடலுக்கடியில் வலுவான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

நொமியா: ஆஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூ கலிடோனி யாவில் கடலுக்கடியில் மிகக் குறைந்த ஆழத்தில் 7.6 என்ற ரிக்டர் அளவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து லாயல்டி தீவுகள் மற்றும் நியூ காலிடோனியா வில் கடலோரத்தில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப் பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கக் கூடும் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நியூ கலிடோனியாவைச் சேர்ந்த லாயல்டி தீவுகளுக்கு 155 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெ ரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், இதுவரை நிலநடுக் கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற் பட்டதாகத் தகவல் இல்லை.