வர்த்தக உடன்பாட்டை எட்டுவதில் சீனா நம்பிக்கை

பெய்ஜிங்: அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டை எட்டுவதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இருதரப் புக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டில் தீர்வு எட்டப்படாவிடில் சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், சீனா மேற்கண்ட கருத்தைத் தெரிவி த்துள்ளது.

அர்ஜெண்டினாவில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கும் திரு டிரம்ப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்ததைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சீன வர்த்தக அமைச்சு, இரு தலைவர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்ட குறிப் பிட்ட சில அம்சங்கள் விரைவில் அமல்படுத் தப்படும் என்று உறுதியளித்தது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு வர்த்தகம் தொடர்பான பேச்சுவா ர்த்தைகளைத் தான் முன்னெ டுத்துச் செல்லவிருப்பதாகவும் சீனா கூறியுள்ளது. வர்த்தகப் பூசலைக் குறைக்கும் நோக்கில் வேளாண், எரிசக்தி, கார்கள் உள்ளிட்ட மற்ற பொருட் களையும் அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு சீனா முன்வந்து இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியது. அமெரிக்க விவசாயிக ளிடமிருந்து உடனடியாகப் பொருட்களை வாங்குவதற்கும் சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’