வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஜிசாட்-11 செயற்கைக்கோள் இந்தியாவில் அதிவேக இணையச் சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 5,894 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளை 12,000 கோடி ரூபாய் செலவில் ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து ஏரைன்-5 என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-11 செயற்கைக்கோள் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4,000 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களை மட்டும் அனுப்பமுடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. படம்: இபிஏ