மில்லியன்கணக்கான ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்த 107 வயது பாட்டி

யுடியூப்பை பயன்படுத்துபவர்களில் ஒருவரான உலகின் வயதான மஸ்தானம்மா தனது 107 வயதில் திங்களன்று இரவு காலமானார். தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்த சமையல் கலை வல்லுநரின் ‘கன்ட்ரி ஃபுட்’ யுடியூப் தளத்தை மில்லியன்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான காணொளிகளும் இத்தளத்தில் உள்ளன. இதில் இவரது பிரபல தர்ப்பூசணி கோழிச் சமையலும் அடங்கும். உள்ளூர் உணவு வகைகளை விதவிதமாக சமைத்து அதை காணொளியாக யுடியூப்பில் வெளியிட்டு வந்தவர் 107 வயது மூதாட்டி மஸ்தானம்மா. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா பாட்டி.

11 வயதில் திருமணம் செய்து கொண்ட பாட்டி 22 வயதிலேயே கணவரை இழந்துவிட்டார். இவரது கொள்ளுப்பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் தங்கள் பாட்டி அன்புடன் உணவு சமைத்துப் பரிமாறுவதை காணொளியாகப் பதிவுசெய்து ‘கன்ட்ரி ஃபுட்’ என்ற யுடியூப் தளத்தில் வெளியிடத் தொடங்கினார். விதவிதமாக சமைத்து அசத்திக்கொண்டிருந்த பாட்டி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். அவரைப் பற்றி அவரது ரசிகர்கள் பலர் விசாரித்துக்கொண்டே இருந்தனர். இந்நிலையில் மஸ்தானம்மா பாட்டி காலமானார் என்ற செய்தி அவரது யுடியூப் பக்கத்தில் வெளியானது. இது அவரது ரசிகர்களைச் சோகத்தில் மூழ்கவைத்துள்ளது. அவரது கையால் ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என ஏங்கிக்கொண்டிருந்தவர்கள் அவருக்காக கண்ணீர் சிந்தி வருகிறார்கள். படம்: பிபிசி ஊடகம்