கருணாநிதிக்காக வேலையைத் துறந்த காவலருக்கு ஸ்டாலின் ஆறுதல்

திருச்சி: காலஞ்சென்ற திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவருக்காக இரங்கல் கவிதை எழுதிய பெண் போலிஸ் செல்வராணிக்கு ஓர் அண்ணனாக இருந்து உதவிகள் செய்யப் போவதாக நடப்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார். திருச்சி மாநகரக் காவல்துறை யின் நுண்ணறிவுப் பிரிவின் தலைமைக் காவலராகப் பணி யாற்றி வந்தார் செல்வராணி. இந்நிலையில் கருணாநிதி கால மானதை அடுத்து இரங்கற்பா எழுதி சமூக வலைத்தளத்தில் அதைப் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து செல்வராணி மீது நடவடிக்கை எடுத்த உயர திகாரிகள், அவரைப் பணியிட மாற்றம் செய்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த செல்வ ராணி விருப்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்தார். தற்போது அவரது விருப்ப ஓய்வு மனு ஏற்கப்பட்டதாக திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அளிக்கப்பட்டது. “இரங்கல் கவிதை எழுதியது தொடர்பாக விளக்கம் கேட்ட அதிகாரிகள் தாம் பதில் அளிப்ப தற்குள் பணியிட மாற்றம் செய்த தாக செல்வராணி கூறுகிறார்.

தமது பேச்சுரிமை பறிக்கப்பட்ட தாக உணர்ந்ததாகவும், பணி யில் சேர்ந்தால் மீண்டும் இடமாற் றம் என்ற பெயரில் தாம் பழி வாங்கப்படலாம் என்றும் தோன்றி யதால் பணியிலிருந்து விலகியதா கவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் திருச்சி சென்ற முக. ஸ்டா லின் அங்குள்ள செல்வராணியின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். “நீங்கள் எழுதிய கவிதையைப் படித்தேன். தலைவர் கருணா நிதியை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என்று அழைத்து கவிதை படைத்துள்ளீர்கள். உங்களுக்கு நான் அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளைச் செய்வேன், கவலை வேண்டாம்,” என்றும் செல்வ ராணிக்கு ஆறுதல் கூறினார் மு.க. ஸ்டாலின்.

செல்வராணி வீட்டில் மு.க. ஸ்டாலின். படம்: தகவல் ஊடகம்