ஜெயாவுக்கு புகழாரம் சூட்டிய கனிமொழி

சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச் சல் போட்டு வெற்றி பெற்றுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜெயலலிதா குறித்து அவர் பதிவிட்டுள்ளார். நேற்று ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் அவருக்குப் புகழாரம் சூட்டும் வகையில் கனிமொழியின் பதிவு அமைந்துள்ளது.

“ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. பல்வேறு சவால் களை எதிர்கொண்டு வெற்றி பெற் றவர் ஜெயலலிதா. அவருடைய இறுதி நாட்களைப் பற்றிய தெளி வின்மை மிக துரதிர்ஷ்டவசமா னது,” என்று தமது பதிவில் கனிமொழி மேலும் தெரிவித்துள்ளார்.