ஆபாசப் படம் எடுக்க கேமரா: விடுதி நடத்திய ஆடவர் கைது

சென்னை: பெண்களுக்கான விடுதியில் குளியலறை உட்பட பல இடங்களில் நவீன ரகசிய கேமராக் களைப் பொருத்திப் பெண் களை ஆபாசமாகப் படம் பிடிக்க முயன்ற ஆடவரைச் சென்னை போலிசார் கைது செய்துள்ளனர். 48 வயதான சம்பத்ராஜ் என்ற அந்நபர் குரோம் பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விடுதியாக நடத்தி வந்தார். இதில் புதுவையைச் சேர்ந்த பேராசிரியை உட்பட 7 பெண்கள் தங்கியிருந்தனர். இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பேராசிரியை தன் அறையில் உள்ள மின் சார பிளக்கைப் பயன் படுத்தியபோது அது சரி யாக இயங்கவில்லை. இதையடுத்து அதைச் சோதித்துப் பார்த்தபோது அதனுள் சிறிய கேமரா இருப்பது தெரியவந்தது.

அவரது புகாரின் பேரில் போலிசார் விடுதிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் உள்ள 3 குளியலறை, படுக்கை யறை, கூடத்தில் உள்ள இரு கடிகாரங்கள் என மொத்தம் 9 இடங்களில் சம்பத்ராஜ் கேமராக்களை ரகசியமாகப் பொருத்தி அங்கு தங்கியுள்ள பெண்களைப் படம் பிடித்தது அம்பலமானது. இதையடுத்து அவர் கைதாகியுள்ளார்.