20 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

நாகை: கஜா புயல் ஏற்படுத்திய கடும் சேதங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்கள் இன்னும் முழுமை யாக மீளவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூரில் பல லட்சம் பேர் கடந்த 20 நாட்களாக மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தமிழக ஊட கம் தெரிவித்துள்ளது. இம்மாவட் டங்களில் உள்ள சுமார் 450 ஊராட்சிகளைச் சேர்ந்த 4.46 லட் சம் மின் இணைப்புகள் இன்னும் சீர்செய்யப்படவில்லை.

கடந்த மாதம் தமிழகம் முழுவ தும் பரவலாக கனமழை பெய்தது. ஒருபக்கம் பருவமழை பெய்து கொண்டிருந்த நிலையில், மற் றொரு புறம் கஜா புயலும் வீசியது. இதில் மேற்குறிப்பிட்ட 4 மாவட் டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்களில் மொத்தம் 66.32 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுள் 61.86 லட்சம் மின் இணைப்புகள் சீர்செய்யப் பட்டுள்ளன. புயலின்போது வீசிய பெரும் காற்றால் பல்வேறு இடங்க ளில் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. மின் கம்பிகள், மின் கடத்திகள் என மேலும் பல மின்சாதனங்கள் சேதமடைந்ததால் பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. அனைத்தையும் சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போதி லும் சில இடங்களில் இந்தப் பணிகளைத் துரிதகதியில் முடிக்க இயலவில்லை.

“நாட்டிலேயே தமிழகத்தில்தான் அனைத்துக் கிராமங்களிலும் மின் வசதி உள்ளது. புயலால் பாதிக் கப்பட்டுள்ள பல கிராமங்கள் நகர்ப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் 50-60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. அவ்வளவு தூரத்துக்குப் புதிய மின்வழித் தடங்களை அமைத்து மின் விநியோகம் செய்ய வேண்டும் எனில் அதற்குச் சற்று காலமாகும். “இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் இப் பணிகள் பூர்த்தியடையும்,” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இந்நிலையில் புயல் வீசிச் சென்று 20 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட மின்சாரம் இல்லாததால் தங்களது இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது என 4 மாவட்ட மக்கள் புலம்புகின்றனர்.