ஊடகத் துறைக்குப் புதிய மின்னிலக்க வழிகாட்டி திட்டம்

மின்னிலக்க துறையிலுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களும் திறனாளர்களும் தங்களது மின் னிலக்க ஆற்றல்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றிய ஆலோசனையைப் பெற, படிப் படியாக விளக்கும் புதிய வழி காட்டி திட்டம் ஒன்றைப் பயன் படுத்தலாம். ‘ஊடகத் துறை மின்னிலக்கத் திட்டம்’ என்ற இந்தத் திட்டத்தைத் தொடர்பு தகவல் துறைக்கும் காலாசார, சமூக இளையர் துறைக் குமான மூத்த துணை யமைச்சர் சிம் ஆன், மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற ‘ஏடிஎஃப்’ ஆசிய தொலைக்காட்சி கருத்தரங்கில் நேற்று காலை அறி வித்தார். ஊடகத் துறை செயல்படும் சூழல் வேகமாக பரிணமித்து வருவதால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாக திருவாட்டி சிம் தெரிவித்தார்.

ஆசியாவிலும் உலகிலும் வாய்ப்புகளைப் பயன் படுத்த அதிக வலிமையும் வேக மும் கொண்ட நிறுவனங்களும் அதிக திறன்களைக் கொண்டுள்ள திறனாளர்களும் தேவைப்படு வதாக திருவாட்டி சிம் ஆன் கூறினார். ஊடகத் துறைக்குத் தொடர்ந்து முக்கியமாக இருக்கும் புத்தாக்கத் திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மின்னிலக்கத் திறனையும் மேம் படுத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார். சிறிய, நடுத்தர நிறுவனங்களையும் திறனாளர்களையும் தங்களது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ற தொழில்நுட்ப முறைகள் என்ன என்பதை, திட்டத்தின் ஒரு பகுதியான ‘டிஜிட்டல் ரோட்மேப்’ வழிகாட்டு கிறது.

மின்னிலக்க திறன்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் ஊடக திறனாளர்கள் இதில் காணலாம். தங்களது துறைகளுக்குப் பொருத்தமான மின்னிலக்க முறை களைப் பற்றி தெரிந்து கொள்ள சிறிய நடுத்தர நிறுவ னங்கள், ‘எஸ்எம்இ’ நிலையங் களில் ஆலோசகர்களை நாடலாம். ‘டெக் டெப்போ வெப்’ என்ற இணையத்தளத்திலும் ஏற் கெனவே அனுமதி பெற்றுள்ள மின்னிலக்க முறைகளைப் பற்றி நிறுவனங்கள் தெரிந்துகொண்டு இவற்றைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூரின் பொருளியலுக்கு ஊடகத் துறையின் பங்கு $2.4 பில்லியன் அளவிலானது. திரைப் படம், தொலைக்காட்சி, மின் னிலக்க ஊடகம் ஆகியவற்றின் ஆக அண்மைய நடப்புகளைப் பற்றிய சிங்கப்பூர் ஊடக விழாவில் ‘ஏடிஎஃப்’ மற்றும் ‘ஸ்க்ரீன் சிங்கப்பூர்’ என்னும் அங்கம் வெள்ளிக்கிழமை வரை நடந்தேறும்.