திருமண விருந்து சாப்பிட்ட 42 பேருக்கு உடல்நலக் குறைவு

மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் கலந்துகொண்ட விருந்தாளிகளில் 42 பேர் நோய் வாய்ப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள உணவு நச்சு தொடர்பான சம்பவங்களில் இது ஆக அண்மையிலானது. நேற்றைய நிலவரப்படி இவர் களில் நான்கு பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட மாசுபட்ட உணவு இந்தச் சம்ப வத்திற்குக் காரணம் என்றும் நடந்தது குறித்து விசாரணை தொடர்வதாகவும் சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரி யம், வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளி யிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித் துள்ளன.

விசாரணைக்காக உணவு மாதிரிகளும் உணவைக் கை யாண்ட பணியாளர்களின் கழிவு மாதிரிகளும் சோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளன. முடிந்தவரை உதவியையும் ஆதரவையும் அளிக்க ஹோட்டல் பாதிக்கப்பட்ட விருந்-தினர்களைத் தொடர்புகொண்டதாக மாண் டரின் ஆர்ச்சர்ட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நடந்தது குறித்து அதிகாரிகளுடன் முழு மையாக ஒத்துழைத்து வருவதாக ஹோட்டல் தெரிவித்தது. இது குறித்த அதிகாரபூர்வ விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என் றும் ஹோட்டல் கூறியது.

இந்நிலையில், விருந்து நிகழ்ச் சிகளில் உணவைக் கையாளும் பணியாளர்கள், தங்களது மருத் துவ சோதனைகளை முடித்து அதிகாரிகளின் அனுமதியைப் பெறும் வரை தங்களது பணிகளி லிருந்து தற்காலிகமாக விடுவிக் கப்பட்டிருப்பதாக ஹோட்டல் பேச்சாளர் தெரிவித்தார். விசா ரணை நடைபெறும் வேளையில் விருந்து சமையலறைகளில் ஹோட்டல், சமைக்கப்படாத உண வைப் பரிமாறாது. உணவு சுகாதாரம் மற்றும் தூய்மைக்கான கடுமையான தரநிலைகளுக்கு உடன்படுவதில் ஹோட்டல் தொடர்ந்து கடப்பாடு கொண்டு உள்ளதாகப் பேச்சாளர் கூறினார். படம்: மாண்டரின் ஆர்ச்சர்ட்,

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்