வசதிகுறைந்த மாணவர்கள் முன்னேற்றம் குறித்து ஆய்வு

வசதிகுறைந்த குடும்பப் பின் னணியைச் சேர்நத பாலர் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எவ்வாறு உத வலாம் என்பதைக் கண்டறிய ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ நிறுவனமும் தேசியக் கல்விக் கழகமும் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவுள்ளன. வசதிகுறைந்த குடும்பங்கள், சமுதாயத்தில் முன்னேற்றம் காண் பது, தவறான பாதையில் செல்லக் கூடிய அபாயத்தில் உள்ள பிள்ளை களைக் காப்பாற்ற உதவும் கொள் கைகளைத் திட்டமிடுவது ஆகி யவை இந்த ஆய்வின் நோக்கங் கள்.

இதனை நேற்று ஜூரோங்கின் யுங் ஆன் சாலையில் அமைந்துள்ள ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளி நிகழ்ச்சியில் என்டியுசியின் தலை மைச் செயலாளர் இங் சீ மெங் அறிவித்தார். தற்போது மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 15 விழுக்காட்டினர் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மாதம் $5 முதல் $10 வரை பள்ளிக் கட்டணம் செலுத்துகின்றனர் என்றும் திரு இங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் இரண்டாவது மிகப் பெரிய பாலர் பள்ளி நிறுவன மான என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸின் இரண்டு ஆய்வாளர் களும் தேசியக் கல்விக் கழகத்தின் ஆறு ஆய்வாளர்களும் சேர்ந்து இந்த ஆய்வினை அடுத் தாண்டு தொடங்கி மூன்று ஆண் டுகளுக்கு மேற்கொள்வர். அப்பாலர் பள்ளி நிறுவனத்தின் தற்போதைய ஆதரவுத் திட்டங்கள் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எவ்வாறு உதவியுள்ளன என்பதை அறிந் திடவும் இந்த ஆய்வு கைகொடுக் கும்.

அடுத்தாண்டு பாலர் பள்ளி முதலாமாண்டில் சேரும் 100 மாணவர்கள் 2021ஆம் ஆண்டில் தொடக்கநிலை ஒன்றில் சேரும் வரையில் அவர்களின் நலன், கற்றல் முன்னேற்றம் ஆகியவை ஆராயப்படும். உதவி கிடைத்தபின் குடும்பச் சூழலில் ஏற்பட்ட மாற்றம், மேலும் முன்னேற்றம் காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வு மதிப்பிடும். ST PHOTO: TIMOTHY DAVID