கோக்ககோலா நிறுவனம்: சர்க்கரை பான வரி நல்ல தீர்வு அல்ல

நீரிழிவு நோய்க்கு எதிரான சிங்கப்பூரின் முயற்சிகளை ஆதரித்தாலும் சர்க்கரை கொண்டுள்ள பானங்கள் மீதான வரி அல்லது விளம்பர கட்டுப்பாடுகள் நல்ல தீர்வுகள் அல்ல என்று சுவை பான உற்பத்தி நிறுவனமான கோக்க கோலா தெரிவித்துள்ளது. மக்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக இந்நிறுவனம் கூறியது. தனது உணவுப் பொருட்களின் சர்க்கரை அளவைக் குறைத்தது, குறைந்த அளவு சர்க்கரை அல்லது சர்க்கரையே இல்லாத உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தியது, சிறிய பொட்டலங்களை வழங்கியது உள்ளிட்ட தனது நடவடிக்கைகள் சிலவற்றைக் கோக்ககோலா சுட்டியது.