சிங்கப்பூர்=அமராவதி நேரடி விமானச் சேவை தொடங்கியது

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள அமராவதி நகரின் விஜயவாடா விமான நிலையத்திருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட முதல் நேரடிச் சேவை விமானம் சாங்கி விமான நிலையத்தில் நேற்று காலை தரையிறங்கியது. இன்டிகோ விமான நிறுவனம் இந்தப் புதிய சேவையை வழங்கியது. அமராவதி நகர திட்டங்களிலும் மேம்பாடுகளிலும் சிங்கப்பூரைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சிங்கப்பூருக்கும் அமராவதிக்கும் இடையிலான இந்த வான்வழி இணைப்பை, இரு நகர பங்காளித்துவ உறவுக்கான புதிய மைல் கல் என்று தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.