சிங்கப்பூரில் விஜய் சேதுபதி

தமிழ்த் திரை கதாநாயகர் அனைவரும் சாமானியர்களால் சந்திக்க முடியாத எட்டாத உயரத்தில் இருப்பதுபோலவே திரைப்போட்டு மறைத்து வந்திருக்கிறார்கள். அந்தத் திரையை கிழித்தெறிந்து நானும் உங்களில் ஒருவன்தான் என்பதை நிரூபித்து இருக்கும் ஒரே நடிகர் 'மக்கள் செல்வன்'தான். தொன்றுதொட்டு தங்களை தெய்வங்களாக போற்றும் ரசிகர்களை சாலையில் கால்கடுக்க நிற்கவைத்துவிட்டு பாதுகாப்பான வாகனங்களில் கைகளை மட்டும் ஆட்டிச் செல்லும் கதாநாயகர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் 'மக்கள் செல்வன்' என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகர்களை அன்பால் அரவணைத்து, தன்னைப் போற்றும் ரசிகனுக்கு இந்த முத்தத்தைத் தவிர தன்னால் வேறு என்ன செய்யமுடியும்? என்பதுபோல் ரசிகனை கட்டியணைத்து அழுத்தமாக கன்னத்தில் முத்தத்தைப் பரிசாக அளிக்கும் விஜய் சேதுபதி நம் சிங்கப்பூர் வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். இன்று மாலை 121, சிராங்கூன் சாலையில் இருக்கும் 'மலபார் கோல்ட் & டைமண்ட்' கடைத் திறப்பு விழாவிற்கு மாலை 5 மணியளவில் சிறப்பு விருந்தினராக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கலந்துகொள்கிறார். நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பார். அந்த வகையில் தனது 25வது படமாக 'சீதக்காதி' என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்குப் பல்வேறு வேடங்கள் இருந்ததால் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்களைக் கொண்டு ஒப்பனைப் போடப்பட்டது. இந்தப் படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' புகழ் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி 'திரு.ஆதிமூலம் அய்யா' என்ற நாடகக் கலைஞராக நடித்துள்ளார். படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விளம்பர வேலைகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!