புஜாரா சதத்தால் கரைசேர்ந்த இந்திய அணி

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்தியா=ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 'பூவா தலையா'வில் வென்று முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்தார். 11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. விகாரியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை அளித்தது.

லோகேஷ் ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திக்குமுக்காடியது. 19 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அடுத்தடுத்தாக 3 விக்கெட் டுகளை அது இழந்தது. கோஹ்லி 3 ஓட்டங்களிலேயே ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற் றத்தை அளித்தார். கம்மின்ஸ் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்தை உஸ்மான் குவாஜா பிடித்தார். அடுத்து வந்த ரகானே 13 ஓட்டங்களில் ஆட்ட மிழக்க ஓட்ட எண்ணிக்கை 41ஆக இருந்த போது இந்தியாவின் 4வது விக்கெட்டு சரிந்தது. அடுத்து களம் இறங்கிய, ரோகித் சர்மா, நம்பிக்கையுடன் ஆடினார்.

24.4வது ஓவரில் இந்திய அணி 50 ஓட்டங் களைத் தொட்டது. மதிய உணவு இடைவேளையின்போ து இந்தியா 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்தது. இடைவேளைக்குப் பிறகு இந்த ஜோடியை நாதன் லயன் பிரித்தார். ரோகித் சர்மா 61 பந்துகளில் 2 'பவுண்டரி', 3 'சிக்சர்'களுடன் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா புஜாரா இருவரும் 5வது விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து வந்த விக்கெட் காப்பாளர் ரிசப் பந்த், நாதன் லயன் பந்தில் ஆஸ்திரேலிய விக்கெட் காப்பாளரிடம் 'கேச்' கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களுக்கு எடுத்துத் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் புஜாராவுடன் தமிழக வீரர் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அஸ்வின் 76 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா 4 ஓட்டங்களில் வெளியேற முகம்மது சமி களமிறங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!