எ ழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

இவ்வாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது நேற்று முன்தினம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ் ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாதஸ்வரக்காரர் களின் வாழ்க்கை பற்றியது இந்த நாவல். மத்திய அரசால் இந்திய மொழி இலக்கியங்களுக்கு வழங் கப்படும் மிக உயரிய விருதானது சாகித்ய அகாடமி விருது. எஸ்.ராமகிருஷ்ணன் விருது நகர் மாவட்டத்தின் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்தவர். நூல்கள் வாசிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவரான இவர், ஒருபுறம் தீவிர திராவிடக் கொள் கையிலும் மறுபுறம் தீவிர சைவ சித்தாந்தப் பின்புலத்தின் அடிப் படையிலும் வளர்ந்தவர். புராணக் கதைகளை வாசிப்ப தோடு நிறுத்திவிடாமல் அவற்றில் குறிப்பிடப்படும் இடங்களுக்குப் பயணம் செய்து பார்ப்பதில் தீவிர ஆர்வம் உடையவர் ராமகிருஷ்ண ன்.

அப்படி மகாபாரதம் நடந்த இடங்களுக்குப் பயணம் செய்த இவர், சிலப்பதிகாரத்தை மைய மிட்டு கண்ணகி சென்ற இடங்களைத் தேடிப் பயணம் செய்து வருபவர்.

வருபவர். நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளராக ராம கிருஷ்ணன் திகழ்கிறார். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதை கள், நாவல்கள், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, திரைத்துறை, ஊடகம், இணையம் என்று பல் வேறு தளங்களிலும் தீவிரமாக இவர் இயங்கி வருகிறார்.