மலேசியாவில் இரு பேரணி

கோலாலம்பூர்: மலேசியாவில் இவ் வாரம் சனிக்கிழமை இரு மாபெரும் பேரணிகள் நடைபெறுகின்றன. முதல் பேரணிக்கு எதிர்க் கட்சியினரும் மற்றொரு பேரணிக்கு ஆளும் கட்சியினரும் ஏற்பாடு செய்துள்ளனர். இரு பேரணிகளும் மனித உரிமை தொடர்பில் நடத்தப்படு வதாக இரு தரப்பிலும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கோலாலம்பூரில் திறந்த வெளி யில் நடைபெறும் ஆர்ப்பாட்ட பேரணியில் பாஸ் கட்சி, அம்னோ கட்சி உள்ளிட்ட மலாய்-முஸ்லிம் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் பங்கேற்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இந்தப் பேரணிக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் பெட்டாலிங் ஜெயாவில் ஆளும் கூட்டணி மற்றொரு பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிர தமர் மகாதீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். எதிர்க்கட்சிகளின் பேரணிக்கு போட்டியாகவே ஆளும் கட்சியி னரின் பேரணி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இரு பேரணிகளுக்கும் முறை யான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோலாலம்பூரின் மெர்டேக்கா சதுக்கத்தில் சுமார் அரை மில் லியன் பேர் திரள்வார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு. ஐநாவின் எல்லா வகை பாகு பாட்டுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்தத்திற்கு மகாதீர் தலைமை யிலான அரசாங்கம் ஆதரவு வழங் காததை கொண்டாட விரும்பு கிறோம் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.

இந்தப் பிரச்சினையால் பாஸ், அம்னோ மற்றும் மலாய்-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் மண்ணின் மைந்தர்கள் கொள்கை விலக்கிக் கொள்ளப்பட்டால் தங்களுடைய சிறப்பு உரிமைகள் பாதிக்கப்படும் என்று மலாய்-முஸ்லிம் அமைப் புகள் அஞ்சுகின்றன. ஐநா உடன்பாட்டுக்கு எதிரான எதிர்க்கட்சி பேரணி பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கி ஆறு மணிக்கு முடிவடையும். இதற்கு அரை மணி நேர தொலைவில் உள்ள பெட்டாலிங் ஜெயாவின் பாடாங் டிமுரில் மலேசியா மனித உரிமை ஆணையம் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் பிரதமர் மகாதீர் சிறப்புரை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!