புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு இலவச மனை

சென்னை: நீர்நிலை, மேய்க்கால், சாலைகள் போன்ற புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்துவரும் ஏழை மக்களை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு தகுதியின் அடிப் படையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தங்களுக்கு என்று எந்த ஒரு நிலமும் இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்க ளுக்கு 6 மாதங்களுக்குள் 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தாலே 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்றும் இதற்காக தனியாரிடம் இடத்தை வாங்கி இலவச வீட்டு மனைகளை வழங்கவும் முடிவு செய்திருப்ப தாகவும் ஆறு மாதங்களில் இலவச வீட்டுமனைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.