அடிலெய்ட்: டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் முதல் ஓவரின் 3வது பந்திலேயே குட்லெந்த் இன்ஸ்விங்கரை பெரிய கவர் டிரைவ் பால் என நினைத்து ஆடி ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பிஞ்ச் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இது குறித்து பாண்டிங் அவரைச் சாடியுள்ளார். "பாகிஸ்தானுக்கு எதிராக அபுதாபியில் பிஞ்ச்சை தொடக்க வீரராகக் களமிறக்கியதிலிருந்து தான் பிரச்சினை தொடங்கியது. "அந்த மைதானம் உலகிலேயே எளிமையாக விளையாடக்கூடிய இடம். "அங்கு தொடக்க வீரராக களமிறங்கிய அவர் ஓரளவுக்கு சுமாராகவே ஆடினார். இதனால் அவரை இங்கேயும் தொடக்க வீரராக இறக்க வேண்டியதாயிற்று. "'ஸ்விங்' ஆகும் சிவப்புப் பந் துக்கு எதிராக அவர் பலவீனமா னவர் என்று அனைவருக்கும் தெரி யும்.
ஆஷஸ் தொடர் ரொம்பத் தொலைவில் இல்லை. இங்கி லாந்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். அங்கு பிஞ்ச் எப்படி விளையாடப்போகிறாரோ?
"சில வேளைகளில் இப்படியும் நடப்பதுண்டு, ஆனால் ஏரோன் பிஞ்ச் இன்னும் நிறைய பயிற்சி எடுத்து கற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது," என்றார் ரிக்கி பாண்டிங்.