தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு இறங்குமுகம்

புதுடெல்லி: ராஜஸ்தான், தெலுங் கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தல்களில் வாக்குகள் எதிர் வரும் 11ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், பல தரப்பு களிலிருந்தும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு கருத்துக்கணிப்பு களும் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடைந்து, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று குறிப் பிடுகின்றன. 'டைம்ஸ் நவ் - சி.என்.எக்ஸ்.' கருத்துக்கணிப் பில் பாஜகவுக்கு 85, காங்கிரஸ் கூட்டணிக்கு 105, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 2 தொகுதிகளும் மற்றவற்றுக்கு 7 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 'சி வோட்டர்' கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் காங் கிரஸ் கூட்டணி 137 தொகுதி களைக் கைப்பற்றும் எனவும் பாஜக 60 தொகுதிகளை மட்டுமே பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜன் கீ பாத் கருத்துக்கணிப்பு மட்டும் பாஜகவுக்கு 93 தொகுதி களில் வெற்றி சாத்தியம் எனவும் காங்கிரஸ் 91 தொகுதிகளைத்தான் பெறும் எனவும் மற்றவர்கள் 15 தொகுதிகளைப் பிடிப்பார்கள் எனவும் தெரிவிக்கிறது.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மெய்யாகும்பட்சத்தில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பதவிக்கான முகமாகக் கருதப்படும் சச்சின் பைலட் ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க் கப்படுகிறது. தெலுங்கானா சட்டப்பேரவை யில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியைத் தக்கவைக்கும் என வும் சந்திரசேகர ராவ் பெரும்பான் மையுடன் மீண்டும் ஆட்சி அமைப் பார் எனவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!