‘மாஸ்டர்செஃப் சமையல்’ போட்டியின் வெற்றியாளர்

செம்மறியாட்டு இறைச்சியை நெருப்பில் வாட்டி, அதனுடன் பக்கோடாவைப் போன்று காலிஃபிளவரைப் பொறித்து தமது சமையல் திறனை வெளிக்காட்டினார் ஆஸ்தி ரேலியாவின் 10வது ‘மாஸ்டர் செஃப்’ போட்டியின் வெற்றியாளர் திரு சசிகுமார் செல்லையா, 40. சாலையோர உணவுகளை அ டி ப் ப டை யா க க் கொ ண் டு உணவுகளைப் படைத்த திரு சசிகுமார், இந்திய உணவு வகைகளுடன் மற்ற பாரம்பரிய உணவுகளையும் சேர்த்து போட்டி யில் நடுவர்களைக் கவர்ந்தார்.

சிங்கப்பூரில் பிறந்து காவல் அதிகாரியாகப் பணிபுரிந்து தற்போது ஆஸ்திரேலியாவில் சிறைச்சாலை அதிகாரியாக இருக்கும் அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு தமது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இளம் வயதில் பெற்றோருக்கு சமையலில் உதவியாக இருந்த சசிகுமார், வெளிநாட்டிற்குக் குடியேறிய பிறகு சுயமாக பல உணவுவகைகளைச் சமைக்கத் தொடங்கினார். இந்திய உணவை மட்டுமல் லாமல், சீன, மலாய், மேற்கத்திய உணவுகளையும் வீட்டில் சமைத்துப் பழகிய சசிகுமாருக்கு அதன் பிறகு சமையல் கலையின்மீது மேலும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் குறிப் பிட்டார்.

சமையல் கலையில் சுயமாக ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட திரு சசிகுமார் ஆஸ்திரேலியாவின் ‘மாஸ்டர்செஃப் சமையல்’ போட்டியில் வெற்றி பெற்றார்.