சர்க்கரை உண்மையிலேயே இனிக்கவேண்டுமானால்...

அறுசுவைகளான உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றில் இனிப்புக்கு என்று சிறப்பு இயல்புகள் உண்டு. கைக்குழந்தைகள் முதல் தள்ளாத வயது முதியவர்கள் வரை எல்லாரின் நாக்கிலும் உமிழ்நீரை ஊறவைக்கும் திறமை இனிப்புக்கு அதிகம் இருக்கிறது.

அதன் ஈர்ப்புத் தன்மைக்கு ஆளாகி அதன் வலையில் விழுந்துவிட்டால், காலப்போக்கில் நம் உடலில் நிரந்தரமாகத் தங்கி, விரும்பத் தகாத பல மாற்றங்களை ஏற்படுத்திவிடக் கூடிய கெட்ட குணமும் இனிப்புக்கு உண்டு. ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இனிப்பு தொடர்ந்து சேர்ந்துவரும்போது அதைச் சிதைத்து சக்தியாக மாற்றுவதற்கான தெம்பை உடல் படிப்படியாக இழந்துவிடும்.

இதனால் ரத்தத்தில் சேரும் அளவுக்கு அதிக சர்க்கரையை வெளியேற்றவேண்டிய கூடுதல் பொறுப்பை சிறுநீரகங்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையே நீரிழிவு நோய் என்று பொதுவாகக் குறிப்பிடப் படுகிறது. உலகில் இப்போது 425 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கை யில், நீரிழிவு நோய் மிகவும் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உள்ளது. இங்கு, 2017ஆம் ஆண்டு நிலவரப்படி அந்த நோய், 606,000க்கும் மேற்பட்ட மக் களைப் பீடித்து உள்ளது.

இப்படியே விட்டுவிட்டால் 2050ஆம் ஆண் டில் சிங்கப்பூரில் ஒரு மில்லியன் பேர் இந்த நோயால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. மக்களை மட்டுமே வளமாகக் கொண்டிருக் கின்ற சிங்கப்பூர், நீரிழிவு நோய் பிரச்சினை யைச் சமாளிக்க 2016ஆம் ஆண்டில் தேசிய அளவில் போரைத் தொடங்கியது. சிங்கப்பூரர்கள் நாள் ஒன்றுக்குச் சராசரி யாக 12 தேக்கரண்டி சர்க்கரையை உட்கொள் கிறார்கள்.

முழுமையாகப் படிக்க epaper.tamilmurasu.com.sg