விஜய் சேதுபதி: சிங்கப்பூர் ஒரு கூட்டு குடும்பம்

எஸ்.வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்

சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்திருந்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தன்னைக் காண வந்த ரசிகர் கூட்டத்தைக் கண்டு பேரானந்தத்தில் திழைத்தார். நேற்று முன்தினம் 121, சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் 'மலபார் கோல்ட் & டைமண்ட்' நகைக் கடையைத் திறந்து வைக்க வந்திருந்தார். திறப்பு விழாவிற்கு முன்னதாக 'பார்க் ராயல்' ஹோட்டலில் 'மலபார்' நகைக் கடையின் ஏறத்தாழ 300 சிறப்பு வாடிக்கை யாளர்களைச் சந்தித்து பேசியபோது, "இந்த ஊரைப் பார்க்கும்போது மொத்தமாக ஒரு கூட்டு குடும்பம்போல் தெரிகிறது. ஒரு நாடு தன் மக்களை இவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

"வழக்கமாக ஒருவர் பேசும்போது தன்னைப் பற்றிய விஷயங்களைத்தான் பேசுவார்கள். ஆனால் வரும் வழியில் என் வண்டியை ஒட்டியவர் சிங்கப்பூரைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டே வந்தார். "பொதுவாக அண்ணன், தம்பி அல்லது அக்கா, தங்கையாக வாழ்வதே கடினம். ஒரு நாட்டில் ஓர் அரசாங்கத்தின் கீழ், கூட்டுக் குடும்பமாக வாழ்கிறீர்கள், பார்க்க அழகாக இருக்கிறது," என்று மகிழ்ச்சியுடன் கூறினார் விஜய் சேதுபதி. அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் களைச் சந்தித்து நகைகள் வாங்கியவர் களுக்கு மேடையில் நகைகளை வழங்கி, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

சிராங்கூன் சாலையில் 121, மலபார் கோல்ட் & டைமண்ட்' நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவருடன் கடை நிர்வாகிகளும் நண்பர்களும் உடன் இருக்கின்றனர். படம்: மலபார் கோல்ட் & டைமண்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!