பல்கலைக்கழகச் சேர்க்கையில் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் நீக்கம்

முவாமினா

சில மாணவர்கள் தங்கள் தொடக் கப்பள்ளிப் பருவத்திலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கி வரு வார்கள். மேலும் சிலரோ கல்வி யில் சிறக்க சற்று தாமதமாகலாம். உள்ளூர் பல்கலைக்கழகங்களுக் குத் தேர்வு பெற, கல்வி அமைச்சு கடந்த மாதம் அறிமுகம் செய்த மாற்றங்கள் இத்தகையோருக்கு கைகொடுக்கும் என்பது மாணவர் கள் பலரின் கருத்து. வரும் 2020ஆம் ஆண்டுமுதல் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்ட தாரிகள் சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகம், நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய வற்றில் சேரும்போது அவர்களின் ‘ஜிசிஇ’ சாதாரண நிலைத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுக் கப்படமாட்டா.

மாணவர்களின் பட்டயச் சான் றிதழில் குறிப்பிடப்படும் சராசரி மதிப்பளவுப் புள்ளிகள் (GPA) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போதையை முறையில், இந்த இரண்டு பல்கலைக்கழகங் களில் சேரும் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்களுக்கான மதிப்பீட்டில் 20 விழுக்காடு இவர் களது ‘ஜிசிஇ’ சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் அங்கம் வகிக் கின்றன. பல்கலைக்கழகத்தில் தொடக் கக் கல்லூரி மாணவர்கள் சேரும் வாய்ப்பையும் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்கள் சேரும் வாய்ப்பையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாக இந்த மாற்றம் உள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் சமூக அறி வியல் பல்கலைக்கழகம் ஆகிய மற்ற நான்கு பல்கலைக்கழகங் கள் ஏற்கெனவே தொழிற்கல்லூரி சராசரி மதிப்பளவுப் புள்ளிகள், திறனாய்வுச் சோதனைகள், நேர் முகத் தேர்வுகள் உள்ளிட்ட மதிப் பீட்டு முறைகளைப் பயன்படுத்துகின்றன.

மேல் விவரம்: epaper.tamilmurasu.com.sg

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்