முதியோருக்குக் கைகொடுக்கும் சுகாதாரத்துறை மாணவர்கள்

எஸ்.வெங்கடேஷ்வரன்

பணியாளர்களாக மட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் முதிய வர்களுக்கு உதவிசெய்து சிறந்த சமூகத் தொண்டர்களாகவும் விளங்க, சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாண வர்கள் சிலர் தயாராகி வருகிறார் கள். கூ டெக் புவாட் மருத்துவ மனையுடனும் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடனும் இணைந்து இம்மாணவர்கள் வழி நடத்தும் ‘ட்ரை-ஜெனரேஷனல் ஹோம்கேர் @ நார்த் வெஸ்ட்’ (Tri-Generational Homecare @ North West) திட்டம், கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு முறை வெற்றிகரமாக நடந்தேறி இப்போது ஒன்பதாவது முறையாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத் தின் ஒவ்வொரு கட்டமும் இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கிறது.

இவ்வாண்டு செப்டம்பர் தொடங்கிய திட்டத்தின் ஒன்பதாம் கட்டம் ஓராண்டுக்கு நீடிக்கும். இதன் தொடர்பிலான நிகழ்ச்சி ஒன்று ஈசூன் சமூக மருத்துவ மனையில் கடந்த மாதம் நடை பெற்றது. வெவ்வேறு தலைமுறையின ருக்கு இடையே புரிதலையும் பிணைப்பையும் ஏற்படுத்த முற் படும் இத்திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 1,000 இளையர்கள் தொண்டூழியர்களாகப் பங்காற் றினர். இவர்களது முயற்சிகளால் இதுவரை 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பலனடைந்து உள்ளனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சுகாதாரத்துறை மாணவர்கள், மருத்துவ உதவியும் மனோவியல் உதவியும் தேவைப்படும் முதியோ ருடன் உறவாடி அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். படங்கள்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்