ஆ. விஷ்ணு வர்தினி

கல்வி ஒரு பக்கம், சேவை மறுபக்கம்தொழில்நுட்பம் எவ்வாறு பின்தங்கிய மக்களையும் அரவணைக்கலாம் என்பது மிர்தினியின் நீண்டநாள் எண்ணம். தொடக்கக் கல்லூரியில் தற்காப்பு அறிவியல் அமைப்பின் (டிஎஸ்ஓ) வழிகாட்டுதலில் ஆய்வு நடத்தும் வாய்ப்புப் பெற்ற இவர், அதன்மூலம் பேச்சுத்தடை, செவிக்குறைபாடு இருப்போரின் தேவைகளைக் கண்டறிய முயன்றார். 
தைப்பூசம் சிங்கப்பூரின் பல்லின பலசமய கலாசாரத்தைப் பறைசாற்றும் தனித்துவமான ஓர் அடையாளம் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
கடந்த 14 ஆண்டுகளாகக் காவடி எடுக்கும் பால் சிங்கிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் அவரின் பால்ய நண்பர் லயனல் டான், 35. பால் சிங்கின் மூன்றடுக்குக் காவடியை ஆண்டுதோறும் கட்டுவது இவரின் வழக்கமாகிவிட்டது.
இரவு நீடித்த தொடர் மழையையும் பாராது, தைப்பூச ஊர்வலத்தில் இணைந்தனர் பல்லாயிரம் பக்தர்கள். வாரநாள் ஆயினும், பள்ளி மாணவர்கள், பணிபுரிவோர் எனப் பலதரப்பட்டோரும் தங்களின் காணிக்கைகளைச் செலுத்தினர்.
சிறந்த கல்விமான் ஆகவேண்டும் என்ற தமது கனவுகள் குடும்ப சூழ்நிலையால் சற்று பின்தங்கியபோதும், அவற்றை நியூஜென் அமைப்பு மீண்டும் தூண்டியதாக உணர்ந்தார் டேவிட் (உண்மைப் பெயரன்று).
பறவைகளைப் பராமரிக்கத் தொடங்கிய ஒருவர், அதனால் தன் வாழ்க்கையில் வழித்தவறிச் செல்லவில்லை என்றார். அது அர்த்தமுள்ள ஒரு பொழுதுபோக்கு என்றார் மற்றொருவர்.
முதலாம் உலகநாடாகக் கருதப்படும் அதிநவீன சிங்கப்பூரில், கிட்டத்தட்ட 1,000 பேர் நிரந்தர வீடில்லாமல் இருப்பது 2019ஆம் ஆண்டில் தெரியவந்தபோது பலரும் அதிர்ச்சியுற்றனர்.
எகிப்தியர்கள் உணவு விரயத்தைக் குறைப்பதற்கு ரொட்டியிலிருந்து மதுபானம் தயாரிக்கும் ஆதிகால பழக்கத்தைக் கொண்டிருந்ததாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.
ஈரறை வாடகை வீட்டில் தாத்தா, பாட்டி, தங்கையுடன் லெங்கோக் பாருவில் வசிக்கும் 11 வயது ஹேமா (உண்மைப் பெயரன்று), பெரும்பாலான நாள்களில் காலை உணவு உண்பதில்லை.