முதியோருக்கான இலவச சிகை அலங்காரம்

சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் நோக்கத்தில் முதியவர்களுக்கு இலவசமாக முடி திருத்தும் சேவையை வழங்குகிறது தெக் வாய் லேனில் இயங்கிவரும் முடிதிருத்தகம் ஒன்று.  

சிறார் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும் சிகை அலங்கார சேவையை ‘ஹூஸ் நெக்ஸ்ட்?’ வழங்கி வருகிறது.

சுமார் நான்கு ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த சிகை அலங்காரக் கடை அந்தந்த வயதினரின் முக வடிவங்கள், அம்சங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற சிகை அலங்காரங்களைச் செய்கிறது.
இவ்வகையில் சமூகத்துக்கும் தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நோக்கில் 70 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கு இலவச சிகை அலங்கார சேவையை வழங்குகிறது இந்த முடி திருத்தகம்.

மேலும் ஆறு வயதும் அதற்கு கீழ் உள்ள ஆண் குழந்தைகளுக்கு $2யில் சிகை அலங்கார சேவையும் இங்கு வழங்கப்படுகின்றது. ஆறு வயதுக்கும் அதற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு $4யில் சிகை அலங்காரம் வழங்கப்படுகிறது.

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, குழந்தை என அனைத்து குடும்பத்தினரும் தங்களை பராமரித்துகொள்வதற்கான தளமாக இந்நிலையம் உள்ளதென திரு  மோஹனராம் குறிப்பிட்டார்.
“இந்த இரண்டு கடைகளும் பக்கத்தில் உள்ளதால் ஒரு குடும்பமாக எல்லோரும் வந்து தங்களின் வெளிதோற்றத்தை மேலும் அழகுப்படுத்தி கொள்ளலாம். தோற்றத்தை அழகூட்டி மனதை மகிழ்வூட்டும் நமது சேவை  குடும்பத்தை பிணைக்கும்  பாலமாகவும் உள்ளது,” என்று இந்த முடி திருத்தகத்தின் நிர்வாகர் திரு மோஹனராம் சுப்பையா கூறினார்.

அவரது சமூக அக்கறை தமது கடையில் வைக்கப்பட்ட பொருட்களிலிருந்து வெளிப்பட்டது. குழந்தைகளை பயமுறுத்தாமல் சிகை அலங்காரத்தை செய்வதற்கு குழந்தைகளுக்கென ஒரு சிறிய நாற்காலி உள்ளது. அதில் மழலை பாடல்களும் கதைகளும் இசைக்க அவர்களின் சிகை அலங்காரம் அலப்பரை இல்லாமல் முடியும்.

70 வயதுக்கும் மேல் உள்ள முதியவர்களுக்கு வழங்கப்படும் இலவச சிகை அலங்காரத்தை பெற்ற  70 வயது திரு மணியன் இங்குள்ள சேவைகளைப் பாராட்டினார்.
“எனக்கு திரு வீரா தான் சிகை அலங்காரம் செய்துவிடுவார். எனது வயதுக்கும் முக வடிவத்திற்கும் ஏற்ப எளிமையான ஒரு சிகை அலங்காரத்தை அவர் செய்துகொடுப்பார். தலையின் இரு பக்கங்களிலும் சிறிதளவு முடியை சவரம் செய்த பின் நடுவே உள்ள முடியை அடர்த்தியாக காண செய்வார் திரு வீரா. வயதானவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இதுப்போன்ற பயனுள்ள இலவச சேவைகள் வரவேற்க்கத்தக்கவை. இது பண பற்றாக்குறையால் தவிக்கும் முதியோருக்கு கண்டிப்பாக உதவும்,” என்றார் திரு மணியன்.

தினமும் சுமார் 40 வாடிக்கையாளர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் திரு வீரா இக்கடையில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிகிறார். வெவ்வேறு வயதினருக்கு  இச்சேவையை வழங்கும் அவர் இளையர் மத்தியில் ‘ஜன்டில்மேன் கட்’ என்ற ‘ஸ்டைல்’லும் முதியோர் இடையே முகத்தை பிரகாசமாக தோற்றமளிப்பதற்கு உதவும் எளிமயான ‘ஸ்டைல்’லும் பிரபலாமாக உள்ளதென கூறுகிறார்.
சிங்கப்பூரின் 54ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய சேவை புரியும் அனைவருக்கும் இக்கடை $5.40யில்  சிகை அலங்கார சேவையை வழங்கும்.

ஆண்களுக்கான சிகை அலங்காரத்திற்கு : புளோக் 138, தெக் வாய் லேன், #01-337
பெண்களுக்கான பராமரிப்பு நிலையத்திற்கு : புளோக் Blk 137, தெக் வாய் லேன், #01-315A

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon