தொடங்கியது பொங்கல் குதூகலம்

இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கான ஒளியூட்டு விழா நேற்றிரவு சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள பிஜிபி அரங்க வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. நிதி, கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் ஒளியூட்டுக்கான விசையை அழுத்தியவுடன் லிட்டில் இந்தியா பகுதி ஒளி வெள்ளத்தில் மூழ்கியது.

“பொங்கல் திருநாள் தமிழர் கலா சாரத்தையும் மரபுடைமையையும் விளக் கும் விழாவாக அமைந்துள்ளது. ஏற் பாட்டுக் குழு அதன் அம்சங்களை சிறப் பாக வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக் குரியது,” என்றார் அமைச்சர் சிம் ஆன். பண்டிகைகள் குடும்ப ஒற்றுமை யையும் பிணைப்பையும் வலுப்படுத்தும் விழாக்களாக இருந்து வரும் உணர்வை நம் இளையர்களிடத்திலும் பரப்புவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.

ஒளியூட்டு அங்கத்துக்கு முன் நேற்று மாலை 6.30 மணி முதல் இந்தியாவின் பொங்கு தமிழ்க் குழுவைச் சேர்ந்த 49 கலைஞர்களும் சிங்கப்பூரின் பரதா ஆர்ட்ஸ் குழுவின் இரு கலை ஞர்களும் மலேசியாவின் ஆஸ்ட்ரோ விண்மீன் குழுவின் 29 கலைஞர்களும் இந்திய பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பல்வேறு நடனங்களை ஆடி பார்வை யாளர்களைப் பரவசப்படுத்தினர். செய்தி: சுதாஸகி ராமன்

ஒளியூட்டுக்கான விசையை அழுத்தி பொங்கல் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (நடுவில்). படம்: ராஜராஜன்

இப்பகுதியில் மேலும் செய்திகள்
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

மாநாட்டிற்கு வந்திருந்தோரிடம் உரையாடினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். நடுவில் தெற்காசிய ஆய்வுக் கழகத் தலைவர் கோபிநாத் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

புலம்பெயர் சமூகத்துக்கு மூன்று யோசனைகள்

(இடமிருந்து) தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் தலைவர்
கோபிநாத் பிள்ளை, மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்,
திரு ஜே.ஒய். பிள்ளை, திரு மன்சூர் ஹசான், என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய். படம்: தெற்காசிய ஆய்வுக் கழகம்

17 Nov 2019

ஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது