எஸ்எம்ஆர்டி பேருந்தும் ஆயுதப் படைகளின் வாகனமும் மோதிய விபத்தில் ஆறு பயணிகளுக்குக் காயம்

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் கனரக வாகனமும் எஸ்எம்ஆர்டி பேருந்தும் மோதிய விபத்தில் ஆறு பேர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் மதியம் மண்டாய் அவென்யூவில் உள்ள தகனச் சாலைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப் படுகிறது.

தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் மடிக் கக்கூடிய பாலத்தை அதன் கனரக வாகனம் சுமந்து சென்றதாகத் தெரிவித்தது. தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளும் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் பொது மக்கள் பாதுகாப்பை முன் னிட்டு விபத்தை கடுமையாகக் கருதுவதாகவும் அறிக்கை குறிப் பிட்டது. இந்நிலையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த எஸ்எம்ஆர்டி நிறுவனம், பேருந்தில் பயணம் செய்த ஆறு பயணிகள் காயம் அடைந்த விவரத்தை வெளியிட்டது.

“காயம் அடைந்த பயணி களுக்கு ஆன அனைத்து உதவி களையும் வழங்கி வருகிறோம். விபத்து குறித்து எஸ்எம்ஆர்டியும் போலிசாரும் விசாரித்து வரு கின்றன,” என்று எஸ்எம்ஆர்டியின் பொதுத் தொடர்பு பிரிவின் உதவி தலைவர் பாட்ரிக் நாதன் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

20 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

முகம்மது ஃபாரிட் முகம்மது சாலே மீது துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் கார்பரல் கோக்கை 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ள 34 வயது சார்ஜென்ட் முகம்மது நூர் ஃபட்வா மஹ்முட் என்ற அதிகாரியைத் தூண்டிய குற்றம் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Nov 2019

தேசிய சேவையாளர் மரணம்: முதல் வாரண்ட் அதிகாரிக்கு 13 மாதச் சிறை

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர் கைது