வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து சேவைக்கென தனித் தடம்

சிங்கப்பூரில் கார்களின் பயன்பாட்டைக் குறைத்து, 2050ஆம் ஆண்டுவாக்கில் 85 விழுக்காட்டினர் தங்களது முக்கிய போக்குவரத்துத் தேர்வாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. அதிபர் உரையின் தொடர்பில் நேற்று போக்குவரத்து அமைச்சின் பிற்சேர்க்கை வெளியானது. அதில், கார்களைக் கைவிட்டு நடப்பதை, சைக்கிளோட்டுவதை அல்லது பொதுப் போக்குவரத்தை நாடும் மக் களைக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தை உருவாக்குவதற்கான போக்குவரத்து அமைச்சின் திட்டங்கள் இடம்பெற்றுள் ளன.

சாலைத் தடங்களை பொதுப் போக்குவரத்து, சைக்கிளோட்டிகள், நடையர்கள் பயன்பாட்டிற்காக மாற்றி அமைக்கும் இரு துணிச்சலான திட்டங் களைப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவித்திருக்கிறார். இவ்வாண்டில் கட்டுமானப் பணி கள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க் கப்படும் 21.5 கி.மீ. நீள வடக்கு=தெற்கு விரைவுச் சாலையில் இருபுறமும் மூன்று தடங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன் இரு திசைகளிலும் தலா ஒரு தடம் பிரத்தியேகமாக விரைவுப் பேருந்து சேவைக்கு ஒதுக்கப்படவுள்ளது. வடக்கு=தெற்கு விரைவுச்சாலையின் மேற்பரப்பில் சைக்கிளோட்டப் பாதை களும் நடைபாதைகளும் அமைக்கப்படும்.

இரண்டாவது திட்டமாக, மிடில் ரோடு, பிராஸ் பசா ரோட்டிற்கு இடைப் பட்ட பென்கூலன் ஸ்திரீட்டில் 450 மீட்டர் நீளத்திற்கு மரங்கள் சூழ்ந்த நடைபாதைகளும் சைக்கிளோட்டப் பாதைகளும் கட்டப்படும்.

ஓவியரின் கைவண்ணத்தில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்