‘கலந்துரையாடல்களில் ஈடுபாடு’

சிங்கப்பூரின் தேசிய அடையா ளத்தை வலுப்படுத்துதல், அக்கறை மிக்க, பிணைப்புடன் கூடிய சமூ கத்தை உருவாக்குதல். இவ்விரண்டும்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது முக்கிய இலக்குகள் என கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்கெடுக்கும்படி சிங்கப்பூரர்களை ஊக்கப்படுத்தும் ‘எஸ்ஜிஃபியூச்சர்’ கலந்துரை யாடல்களின் வாயிலாக இந்த இலக்குகளை எட்ட முடியும் என்று அமைச்சு நம்புகிறது. அதிபர் உரை தொடர்பில் அமைச்சு நேற்று வெளியிட்ட பிற் சேர்க்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாண்டு நடுப்பகுதி வரை நடைபெறவுள்ள எஸ்ஜிஃபியூச்சர் கலந்துரையாடல் போன்ற பல தளங்கள் மூலமாக சிங்கப்பூரர் களின் ஈடுபாட்டை வலுப்படுத்த அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. தேசிய அரும்பொருளகம், ஆசிய நாகரிக அரும்பொருளகம், சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் போன்றவை மூலம் சிங்கப்பூரின் மரபுடைமையைக் கட்டிக்காக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.