2015ஆம் ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர்

விற்பனையாளராகப் பணிபுரியும் நொரிஸா ஏ மன்சோர், 50, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ‘ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர்’ விருதை வென்றுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் தங்களது சமூகத்தை உயர்த்தவும் பிறது வாழ்க்கை மேம்படவும் நல்லெண்ணத்துடன், விவேகமாக, விடாமுயற்சியுடன் பாடுபட்டுத் தனித்து விளங்கியோரை அங்கீ கரிக்கும் விதமாக இந்த விருதை முதன்முறையாக இந்த ஆண்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிமுகப் படுத்தியது.இந்த விருதுக்கு மொத்தம் பத்துப் பேர் முன்மொழியப்பட்டனர்.

பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலமும் 15 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவின் ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னரும் திருவாட்டி நொர்ஸா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 2014 அக்டோபரில் தோ பாயோ பேரங்காடியில் சக்கர நாற்காலி யுடன் வந்த முதியவருக்கு உதவி யதையடுத்து திருவாட்டி நொரிஸா தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார். மளிகைப் பொருட்கள் வாங்கும் போது அந்த முதியவர் கீழே விழுந்துவிட்டார். அந்த முதிய வரிடம் இருந்து முடை நாற்றம் வீசியதால் அவருக்கு உதவ யாரும் முன்வராத நிலையில் திருவாட்டி நொரிஸா மட்டும் எதையும் பொருட்படுத்தாது முன் சென்று அவருக்கு உதவினார். மேலும் அவருக்கு புதிய உடையும் வாங்கிக் கொடுத்தார்.

பிரதமர் லீ சியன் லூங்கிடம் (இடமிருந்து 2வது) சிறந்த சிங்கப்பூரருக்கான விருது பெறுகிறார் திருவாட்டி நொரிஸா ஏ மன்சோர். உடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ் (இடது), யுபிஎஸ் சொத்து நிர்வாக நிறுவன இயக்குநர் ஜுவெர்க் ஸெல்ட்னர் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து  குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் 2025ஆம் ஆண்டுக்குள் கைரேகை, முக அடையாளம், கண் ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்து தானியக்க குடிநுழைவு சோதனை முறை கடைப்பிடிக்கப்படும். கோப்புப்படம்

13 Nov 2019

அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் 2025க்குள் தானியக்க குடிநுழைவுச் சோதனை

போலிஸ் அலுவலக வளாகத்துக்குள் காலை 8.40 மணியளவில் நடந்து சென்ற ஓர் ஆடவர், அலுவலகம் ஒன்றின் முன்பாக வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது. படம்: இபிஏ

13 Nov 2019

போலிஸ் தலைமையகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி, அறுவர் காயம்

பிடோக் வட்டாரத்தில் இன்று மதியவாக்கில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்