தைப்பூசத்தில் தொழில்நுட்பம்

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச விழாவை மேம்படுத்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. தைப்பூசம் தொடர்பான தக வல்களைப் பொதுமக்கள் உட னுக்கு உடன் தெரிந்துகொள் வதற்கு தொழில்நுட்பத்தின் உத வியை நாடலாம் என்பதும் அந்த யோசனைகளில் ஒன்று. இவற்றை தெரிவித்துள்ள சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெரு மாள் கோயில், அருள்மிகு தெண் டாயுதபாணி கோயில் ஆகிய வற்றுக்கு இடையிலான ஒத் துழைப்பை தைப்பூசத் திருவிழா வின்போது வலுப்படுவதற்கும் அந்தப் பயன்பாடு உதவியாக இருக்கும் என்றார்.

நடந்து முடிந்துள்ள தைப்பூசம் வெற்றிகரமாக நிகழ உதவிக்கரம் நீட்டிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொண்டூழியர்களைக் கௌரவிக்கும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டா வது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் பேசினார். சமூக உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவது, பொதுமக்களும் தைப்பூசத்தைச் சொந்த நிகழ்வுபோல உரிமை கொண்டாடுவது, தொண்டூழியர் களுக்குப் பயிற்சிகள் அளிப்பது, சமூக ஊடகங்கள் வழி தைப்பூசத் தின் உண்மையான அர்த்தத்தை வெளிக்கொணர்வது ஆகியவற்று டன் தொழில்நுட்பத்தின் வழி தைப்பூச அனுபவத்தை மேம்படுத் துதல் குறித்து திரு சண்முகம் முக்கியமாகக் குறிப்பிட்டார்.

வெற்றிகரமான தைப்பூசத்துக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்த தொண்டூழியர்கள் சிறப்பு விருந்தினரான சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துடன் (நடுவில்) அளவளாவி மகிழ்ந்தனர். படம்: த. கவி