சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு

சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் கடந்த ஆண்டில் 4.9 விழுக்காடு உயர்வு கண்டதாக அரசாங்கப் புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. வேலைக்குச் சென்று பொருள் ஈட்டும் சிங்கப்பூர் குடும்பங்களின் இடைநிலை மாத வருமானம் 2015ஆம் ஆண்டில் $8,666 ஆக அதிகரித்தது என்றும் முந்தைய 2014ஆம் ஆண்டில் இது $8,292 ஆக இருந்தது என்றும் புள்ளி விவரத் துறையின் ‘முக்கிய குடும்ப வருமானப் போக்குகள்’ ஆய்வு கூறுகிறது.

பெயரளவு மதிப்பின் அடிப்ப டையில் பார்க்கையில் இந்த உயர்வு 4.5% என்றும் பணவீக்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டபின் இந்த உயர்வு 4.9% என்றும் தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டில் எல்லா வருமானப் பிரிவுகளிலும் குடும்பங்களின் வருமானம் கூடியது. கடைநிலை 20% குடும்பங் களே அதிகபட்ச வருமான உயர்வைக் கண்டன. இதற்கு, குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களின் ஊதி யத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் ஒரு காரணம் எனச் சொல்லப் படுகிறது. கடைசி, இரண்டாம் கடைசி தசமானங்களின்கீழ் வரும் குடும் பங்கள் முறையே 10.7% மற்றும் 8.3% வருமான உயர்வைக் கண்டன.

முதல் பத்து விழுக்காட்டுக் குடும்பங்களும் 21 முதல் 30 வரையிலான சதமானத்தின்கீழ் வரும் குடும்பங்களும் 7.2% வரு மான உயர்வு கண்டன. மீதமுள்ள சதமானப் பிரிவு களின்கீழ் வரும் குடும்பங்களில் தனிநபர் வருமானம் 5.7% முதல் 6.7% வரை கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2005 முதல் 2015 வரை, சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசியைக் குடும்பத் தலை வராகக் கொண்டு, குறைந்தபட்சம் ஒருவரேனும் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் குடும் பங்களில் குடும்ப உறுப்பினர் ஒருவர் வேலை மூலம் ஈட்டும் சராசரி குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon