இன்பத் தமிழுக்கு இனிய விழா

ப பாலசுப்பிரமணியம்

பத்தாண்டாவது ஆண்டாக இடம்பெறும் தமிழ்மொழி விழாவை வர்த்தக, தொழில் அமைச்சரும் (தொழில்) வளர்தமிழ் இயக் கத்தின் ஆலோசகருமான எஸ். ஈஸ்வரன் அதிகாரபூர்வமாக நேற்றுத் தொடங்கி வைத்தார். 'தமிழை நேசிப்போம், தமிழில் பேசு வோம்' எனும் கருப்பொருளைக் கொண்ட தமிழ்மொழி விழா இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும். விழாவை முன்னிட்டு தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் தீவு முழுதும் இடம்பெறவுள்ளன.

பத்தாண்டுகளுக்குமுன் ஒப்பிடும் போது தமிழ்மொழி மாதத்தில் இளையர் களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார். "இளையர்கள் நிகழ்ச்சிகளில் பங்கெ டுக்கின்றனர். அதே நேரத்தில், அவர்களே முன்வந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய் கின்றனர். இளையர்கள் இளையர்களுக் காகவே நிகழ்ச்சிகளைப் படைப்பது தனிச் சிறப்பு. ஏனெனில், மொழி குறித்த விழிப் புணர்வோடு கலாசாரப் பற்றுடனும் இளை யர்கள் செயல்படுவது வரவேற்கத்தக்கது," என்றார் திரு ஈஸ்வரன். வளர்தமிழ் இயக்க ஒருங்கிணைப்புடன் இவ்வாண்டுக்கான தமிழ்மொழி விழாவில் 42 நிகழ்ச்சிகள், 40 இணை ஏற்பாட் டாளர்களால் நடத்தப்படவுள்ளன. 'யுத்தம்' எனும் விளையாட்டுப் போட்டியை தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய் துள்ளது தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை.

"உயர்நிலைப் பள்ளிக்கு பிறகு தமிழ் மொழியுடன் அதிக தொடர்பில்லாத மாணவர்களுக்கு தமிழார்வத்தைத் தூண்டும் விதமாக தமிழ்ச் சொற்களை மையமாகக் கொண்டு இவ்விளையாட்டுப் போட்டி ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார் அப்பேர வையின் தலைவர் அருள் ஒஸ்வின், 23. "எதை நோக்கி இந்தப் பயணத்தை தொடங்கினோமோ அந்தக் குறிக்கோள் நிறைவேறும் வகையில் இந்தப் பத்து ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இளை யர்களின் பங்கேற்பு மேலும் மேலும் வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சி தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்றார் வளர்தமிழ் இயக் கத்தின் தலைவர் ஆர்.ராஜாராம்.

தமிழ்மொழி விழாவை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் (நடுவில்). அவருடன் மீடியாகார்ப் தமிழ், மலாய் சமூகப் பிரிவின் தலைவர் டாக்டர் சித்ரா ராஜாராம் (இடமிருந்து 3வது), வளர்தமிழ் இயக்கத் தலைவர் ஆர் ராஜாராம் (வலமிருந்து 2வது), கௌரவத் தலைவர் வி பி ஜோதி (வலது), தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் டி சந்துரு (வலமிருந்து 3வது). படம்: ஜி சுகநிதி செல்வன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!