ஊழலை மக்கள் சகிக்க மாட்டார்கள்

கடந்த ஆண்டு ஊழல் குறித்த புகார்­­­­­­­கள் அதி­­­­­­­க­­­­­­­ரித்­­­­­­­தி­­­­­­­ருந்தன. ஆனால் லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றத்­­­­­­­தால் (சிபிஐபி) விசா­­­­­­­ரிக்­­­­­­­கப்­­­­­­­பட்ட வழக்­­­­­­­கு­­­­­­­கள் கணி­­­­­­­ச­­­­­­­மா­­­­­­­கக் குறைந்­­­­­­­துள்­­­­­­­ளன என அம்­­­­­­­மன்றத்­­­­­­­தின் புள்­­­­­­­ளி­­­­­­­வி­­­­­­­வ­­­­­­­ரம் தெரி­­­­­­­விக்­­­­­­­கிறது. 2014 ஆம் ஆண்­­­­­­­டில் பெறப்­­­­­­­பட்ட லஞ்ச ஊழல் புகார்­­­­­­­களின் எண்­­­­­­­ணிக்கை 736 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 877 ஆக அதி­­­­­­­க­­­­­­­ரித்­­­­­­­தது. அவற்­­­­­­­றில் 132 புகார்­­­­­­­களே விசா­­­­­­­ரணைக்கு ஏற்­­­­­­­புடை­­­­­­­ய­­­­­­­தாக இருந்தன. இது 2014 ஆம் ஆண்­­­­­­­டில் 136 ஆக இருந்தது. இந்த ஆண்­­­­­­­டில் விசா­­­­­­­ரணைக்கு ஏற்­­­­­­­றுக்­­­­­­­கொள்­­­­­­­ளப்­­­­­­­பட்ட 132 விசா­­­­­­­ரணை­­­­­­­களில் 11 விழுக்­­­­­­­காடு பொதுத் துறையைச் சேர்ந்த அதி­­­­­­­கா­­­­­­­ரி­­­­­­­கள் தொடர்­­­­­­­புடை­­­­­­­யவை. இது கடந்த ஆண்­­­­­­­டு­­­­­­­டன் ஒப்­­­­­­­பி­­­­­­­டுகை­­­­­­­யில் நான்கு விழுக்­­­­­­­காடு குறைவு. எஞ்­­­­­­­சியவை அனைத்­­­­­­­தும் தனி­­­­­­­யார் துறையைச் சார்ந்தவை. இந்தப் புள்ளி விவ­­­­­­­ரம் நேற்று நடை­­­­­­­பெற்ற மன்றத்­­­­­­­தின் நக­­­­­­­ரும் கண்­­­­­­­காட்­­­­­­­சித் தொடக்­­­­­­­க­­­­­­­வி­­­­­­­ழா­­­­­­­வில் அறி­­­­­­­விக்­­­­­­­கப்­­­­­­­பட்­­­­­­­டது.

இந்தக் கண்­­­­­­­காட்­­­­­­­சியைத் தொடங்கி வைத்து பிர­­­­­­­த­­­­­­­மர் லீ சியன் லூங் உரையாற்றினார். அனைத்­­­­­­­து­­­­­­­லக அள­­­­­­­வி­­­­­­­லான ஊழல் குறைந்த நாடு­­­­­­­களின் தர வரிசைப்­­­­­­­பட்­­­­­­­டி­­­­­­­ய­­­­­­­லில் சிங்கப்­­­­­­­பூர் தொடர்ந்து முன்­­­­­­­னிலை வகித்து வரு­­­­­­­கிறது. சிங்கப்­­­­­­­பூ­­­­­­­ரி­­­­­­­டம் கற்­­­­­­­றுக்­­­­­­­கொள்­­­­­­­வ­­­­­­­தற்கு பல நாடு­­­­­­­களும் அவற்­­­­­­­றின் அதி­­­­­­­கா­­­­­­­ரி­­­­­­­களை இங்கு அனுப்பி வைக்­­­­­­­கின்றன. குறைந்த அள­­­­­­­வி­­­­­­­லான லஞ்ச, ஊழல் குற்­­­­­­­றங்களை சிங்கப்­­­­­­­பூர் கொண்­­­­­­­டி­­­­­­­ருப்­­­­­­­ப­­­­­­­தற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்­­ளதாக பிரதமர் லீ கூறினார். சக்­­­­­­­தி­­­­­­­வாய்ந்த அர­­­­­­­சி­­­­­­­யல் தலைமைத்­­­­­­­து­­­­­­­வம்; ஊழ­­­­­­­லுக்கு எதி­­­­­­­ரான வலு­­­­­­­வான, விரி­­­­­­­வான கட்­­­­­­­டமைப்பு; லஞ்ச ஊழலைப் புறக்­­­­­­­க­­­­­­­ணிக்­­­­­­­கும் சமூ­­­­­­­கம் ஆகிய மூன்று முக்­­­­­­­கிய கார­­­­­­­ணி­­­­­­­க­­­­­­­ளால்­­­­­­­தான் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக சிங்கப்­­­­­­­பூர் திகழ்­­­­­­­கிறது என்றார் பிர­­­­­­­த­­­­­­­மர் லீ.

சிங்கப்­­­­­­­பூ­­­­­­­ரின் தொடக்­­­­­­­கம் ஊழ­­­­­­­லற்­­­­­­­ற­­­­­­­தாக இருக்க வேண்­­­­­­­டும் என்­­­­­­­பதை சிங்கப்­­­­­­­பூ­­­­­­­ரின் முதல் பிர­­­­­­­த­­­­­­­மர் லீ குவான் இயூ­­­­­­­வும் அவ­­­­­­­ரது குழு­­­­­­­வி­­­­­­­ன­­­­­­­ரும் அறிந்­­­­­­­தி­­­­­­­ருந்த­­­­­­­னர் என்றார் பிரதமர் லீ. தகு­­­­­­­தி­­­­­­­யற்ற, ஊழல் அர­­­­­­­சாங்கத்­­­­­­­தால் மொத்த இயக்கமே நிலை­­­­­­­குலைந்­­­­­­­து ­­­­­­­போ­­­­­­­கக்­­­­­­­கூடும். ஊழல் என்­­­­­­­னும் புற்­­­­­­­று­­­­­­­நோய் பரவி ஒட்டுமொத்த இயக்­­­­­­­கத்தை­­­­­­­யும் செய­­­­­­­லி­­­­­­­ழக்­­­­­­­கச் செய்­­­­­­­து­­­­­­­வி­­­­­­­டும் என்­­­­­­­பதை அவர்­­­­­­­கள் அறிந்­­­­­­­தி­­­­­­­ருந்த­­­­­­­னர் என்றார் பிர­­­­­­­த­­­­­­­மர் லீ.

"ஊழ­­­­­­­லற்ற ஆட்­­­­­­­சியைத் தரு­­­­­­­வதைக் குறிக்­­­­­­­கும் வகை­­­­­­­யில் திரு லீ குவான் இயூ­­­­­­­வும் அவ­­­­­­­ரது மக்கள் செயல் கட்சி உறுப்­­­­­­­பி­­­­­­­னர்­­­­­­­களும் நாட்­­­­­­­டின் முதல் பத­­­­­­­விப் பிர­­­­­­­மாண நிகழ்ச்­­­­­­­சி­­­­­­­யில் புனி­­­­­­­த­­­­­­­மான வெள்ளை நிற ஆடை­­­­­­­களை உடுத்தி வந்­­­­­­­தி­­­­­­­ருந்த­­­­­­­னர். அத்­­­­­­­து­­­­­­­டன் அந்த நிற ஆடையையே கட்­­­­­­­சி­­­­­­­யின் சீருடை­­­­­­­யாக்­­­­­­­கி­­­­­­­னர். எப்­­­­­­­போ­­­­­­­தும் ஊழ­­­­­­­லற்ற தூய்மை­­­­­­­யான அர­­­­­­­சாங்கத்தைக் கொண்­­­­­­­டி­­­­­­­ருக்க வேண்­­­­­­­டும் என்­­­­­­­னும் அவர்­­­­­­­க­­­­­­­ளது திட­­­­­­­மான தீர்­­­­­­­மா­­­­­­­னத்தையே இந்த வெள்ளை நிறம் காட்­­­­­­­டு­­­­­­­கிறது. அதுவே அன்­­­­­­­று­­­­­­­மு­­­­­­­தல் சிங்கப்­­­­­­­பூ­­­­­­­ரின் வழி­­­­­­­காட்­­­­­­­டு­­­­­­­த­­­­­­­லாகவும் ஆகி விட்டது.

சிங்கப்­­­­­­­பூ­­­­­­­ரர்­­­­­­­கள் ஊழ­­­­­­­லற்ற முறையையே விரும்­­­­­­­பு­­­­­­­கின்ற­­­­­­­னர். சில வேளை­­­­­­­களில் காரி­­­­­­­யங்களைச் செயல்­­­­­­­படுத்த கையூட்­­­­­­­டுப் பெறு­­­­­­­தலையோ கொடுப்பதையோ அவர்­­­­­­­கள் ஒரு­­­­­­­போ­­­­­­­தும் மன்­­­­­­­னிக்க மாட்­­­­­­­டார்­­­­­­­கள்," என்றார் பிர­­­­­­­த­­­­­­­மர் லீ. லஞ்சம், ஊழல் போன்ற­­­­­­­வற்றை எதிர்­­­­­­­கொள்­­­­­­­ளும்­­­­­­­போது சிங்கப்பூரர்கள் புலனாய்வு மன்றத்திற்குப் புகார் அளிக்­­­­­­­கின்ற­­­­­­­னர். "லஞ்ச ஊழ­­­­­­­லுக்கு எதி­­­­­­­ரான சிங்கப்­­­­­­­பூ­­­­­­­ரின் கடுமை­­­­­­­யான சட்­­­­­­­டத்­­­­­­­தில் பயமோ பார­­­­­­­பட்­­­­­­­சமோ இல்லை என்­­­­­­­ப­­­­­­­தில் மக்­­­­­­­களுக்கு நம்­­­­­­­பிக்கை இருக்­­­­­­­கிறது என்று கூறினார் திரு லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!