‘இபி’ விண்ணப்பம் கடுமையாக்கப்படும்

தமிழவேல்

சிங்கப்பூர் ஊழியர் அணியின் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்துவது தனது அமைச்சின் முக்கியமான ஓர் இலக்கு என மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று நடந்த மனிதவள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கூறினார். சிங்கப்பூரர்களுக்கு நியாயமான வேலை வாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக மூன்று கூறுகளில் 'வலு இல்லாத' நிறுவனங்கள் இன்னும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும். வெளிநாட்டவருக்கான 'இபி' வேலை அனுமதி வழங்கும் செயல்முறைகளும் மேலும் கடுமையாக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை 'இபி' வேலை அனு மதி விண்ணப்பத்தின் தனிப்பட்ட குணங்கள் அதாவது விண்ணப்பதாரரின் தகுதி, அனுபவம், ஊதி யம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால் இனி மேல் நிறுவனங்களின் நிலையும் கருத்தில் கொள்ளப்படும். சிங்கப்பூரில் 'இபி' வேலை அனுமதியில் மாதம் $3,300க்கும் அதிகமாக ஊதியம் பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை 21 விழுக்காடுதான் என்றாலும் சிங்கப்பூரர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக இருக்கிறார்கள் என்ற எண்ணத் தை மாற்றுவதில் தனது அமைச்சு முனைப்பு காட்டும் என்றார் திரு லிம்.

நிறுவனங்கள் எந்த அளவுக்குச் சிங்கப்பூரர்களை வேலைக்கு அமர்த்துகின்றன, எதிர்காலத்தில் பெரும்பான்மையான சிங்கப் பூரரைக் கொண்ட ஊழியர் எண்ணிக்கையை வளர்க்க எந்த அளவுக்கு கடப்பாடு கொண் டுள்ளன, சிங்கப்பூர் பொருளி யலுக்கும் சமூகத்திற்கும் எந்த அளவுக்குப் பங்காற்ற முடியும் ஆகிய மூன்று கூறுகளின் அடிப்படையில் இனி நிறுவனங்களின் 'இபி' வேலை அனுமதி விண்ணப் பங்கள் மதிப்பிடப்படும் என்றார் அமைச்சர் லிம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!