ஜூரோங் தீவில் எண்ணெய்க் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது

ஜூரோங் தீவில் நேற்று எண் 23 தெம்­புசு ரோட்­டில் உள்ள எண்­ணெய்க் கிடங்­கில் பிற்­ப­கல் 3 மணிக்கு தீ மூண்டது. இது குறித்து சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை தனது ஃபேஸ்­புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்தது. அதில் 40 மீட்டர் விட்டம் அளவு, 20 மீட்டர் உய­ர­முள்ள கச்சா எண்­ணெய் இருந்த அந்தக் கிடங்­கில் தீ மூண்ட­தாகக் கூறி­யது. குடிமைத் தற்­காப்­புப் படை ஊழி­யர்­கள் சம்பவ இடத்­திற்­குச் சென்ற­போது தீ கொழுந்­து­விட்டு எரிந்து கொண்­டி­ருந்த­தா­க­வும் அந்த எண்­ணெய்க் ­கி­டங்கு நிறு­வ­னத்­தின் அவ­ச­ர­கா­லப் பிரி­வி­னர் தண்­ணீரைப் பீய்ச்­சி­ய­டித்து தீயைக் கட்­டுப்­படுத்த முயற்சி செய்­த­­தா­கவும் கூறப்­படு­கிறது. தீயின் கடுமை­யினால் அந்த எண்­ணெய்க் கிடங்கு சரிந்தது. "கடுமை­யான மழை பெய்து கொண்­டி­ருந்த­போ­தும் தீப்­பி­ழம்­பும் கரும்­புகை­யும் வானத்தை நோக்கிச் செல்­வது காண்­ப­தற்கு படு­மோ­ச­மாக இருந்தது," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறினார் கட்­டு­மான ஊழி­யர் ரவி சாமி­நாதன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!