இல்லத் தாதிமை அறநிறுவனத்திற்கு எஸ்எம்ஆர்டி சிற்றுந்து

இல்லத் தாதிமை அறநிறுவனத் திற்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் சிற்றுந்து வழங்கி ஆதரவு அளித் துள்ளது. சக்கர நாற்காலி நோயாளிகளை அழைத்துச் செல் வதற்கு இந்த சிற்றுந்து ஏதுவாக இருக்கும். அறநிறுவனத்தின் புகைப்பட கண்காட்சியை ராஃபிள்ஸ் சிட்டி மாலில் நேற்று அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர். அப்போது அவர், வீடுகளில் மூத்தோர் கவனிப்பின் முக்கிய துவத்தை வலியுறுத்தினார்.

வேலையிட விபத்து காரணமாக சீயா சீ செங் உடலின் இடுப்புக்கு கீழ் பகுதி செயல்படாமல் போனது. அதன்பின்னர் அவரை சரிவர கவனிக்க யாரும் இல்லாத நிலை யில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில், அறநிறுவனத் தாதி ஒருவரின் உதவியோடு மருத்துவரைச் சந்தித்த அவரது உடல்நிலை இப்போது சற்று முன்னேறியுள்ளது.

அறநிறுவனத்தின் கவனிப்பில் உள்ள மூத்தோர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புகைப்பட கண்காட்சியைக் காண வந்த முதியவர் சீயா சீ செங்கிடமும் அவரைச் சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வந்த தாதி கனகராணியுடனும் உரையாடும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (இடக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!