இரண்டு ஊழியர்களின் மரணம் குறித்த விசாரணை முடிவுற்றது: எஸ்எம்ஆர்டி

இவ்­வாண்டு மார்ச் 22ஆம் தேதி இரு எஸ்­எம்­ஆர்டி ஊழி­யர்­களின் மர­ணத்­திற்குக் காரணம் முக்கிய மான பாது­காப்பு விதி­முறை­கள் பின்­பற்­றப்­ப­டா­ததே என்று எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் கூறியுள்ளது. இதன் தொடர்­பி­லான தனது விசாரணை முடிந்­து­விட்­ட­தாக நேற்று தெரி­வித்த எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம், பாதுகாப்பு விதி­முறை­கள் பின்­பற்­றப்­பட்டிருந்தால் நஸ்­ரு­லு­தின் நஜு­மு­தின், வயது 26, முகம்­மது அஸ்­ரி­யா­ஃப், வயது 24 என்ற அந்த ஊழி­யர்­களின் உயிரிழப்பு தவிர்க்­கப்­பட்­டி­ருக் கலாம் என்று தெரி­வித்­தது. எம்­ஆர்டி ரயில் தடங்களில் வேலை செய்ய ஒரு குழு செல்­வதற்கு முன்னர் அதற்­கான பாது ­காப்பு நட­வ­டிக்கை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

ரயில் தடத்­தில் வேகக் கட்­டுப்­பாட்டை மணிக்கு பூஜ்யம் கிலோ மீட்டர் எனக் குறைப்பது, அந்தத் தடத்­தில் தானி­யங்கி முறையில் செயல்­படும் எந்த ரயில் வண்­டி­யும் வராது உறுதி செய்­வ­து­டன் அங்கு ரயில்­கள் வரு­கின்ற­னவா என்பதைக் கண்­கா­ணிக்­கப் பாது­காப்பு அதி­கா­ரி­களை நிறுத்­து­வது ஆகியவை பாது­காப்பு விதிமுறைகளில் அடங்­கும். இந்த விசா­ரணையை மேற் கொண்ட எஸ்­எம்­ஆர்­டி­யின் விபத்து ஆய்வுக் குழுவில், நிறு­வ­னத்­தின் அபா­யங்கள் குறித்து ஆராயும் குழு­வி­ன­ரு­டன் கெப்பல் கார்ப்­ப­ரே­ஷன், லண்டன் பெரு­விரைவு ரயில்­களை இயக்­கும் 'டிரான்ஸ்­போர்ட் ஃபார் லண்டன்' நிறு­வ­னம் ஹாங்காங் பெரு­விரைவு ரயில்வே கார்ப்­ப­ரே­ஷனைச் சேர்ந்த மூன்று சுயேச்சை நிபு­ணர்­களும் இடம்­பெற்­றி­ருந்த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!