திருமா உதவிக்கரம்; பாமகவைச் சேர்ந்த இருவர் உயிர் பிழைத்தனர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சாலை விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பாட்டாளிக் கட்சி யைச் சேர்ந்த இருவரை மீட்டு காப்பாற்றியிருக்கிறார். விபத்தில் காயம் அடைந்த இருவரும் மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தொண்டர் ஒருவர் கூறியதற்கு, "இப்போது இதுதான் முக்கியமா-?-," என்றும் அவர் கடிந்துகொண்டார். சட்டமன்றத் தேர்தலில் காட்டு மன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் பிர சாரத்திற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.

வழியில் திருநாரையூர் என்ற இடத்தை அடைந்தபோது சாலை விபத்தில் சிக்கிய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத் தில் கிடந்தனர். இந்த நிலையில் உதவி கிடைக்காமல் அவர்களு டைய உறவினர்கள் தவித்தனர். இந்தப் பதற்றமான சூழ்நிலை யில் திருமாவிடம் வந்த ஒருவர், ஆம்புலன்ஸ் வாகனத்துக்குத் தக வல் தெரிவிக்கப்பட்டு ஒரு மணி நேரமாகியும் வரவில்லை என்று கூறினார். இதனால் கொதித்துப்போன திருமாவளவன், "உங்களுக்கு மனசாட்சியே இல்லையா, ஒரு மணி நேரமாக ஒருவர் துடித்துக் கொண்டிருக்கிறார். கால் சதையி லிருந்து ரத்தப்போக்கு அதிக மாகக் காணப்படுகிறது. அந்தப் பெண்மணியும் தாங்க முடியாத வேதனையில் துடிக்கிறார்," என்று கடிந்துகொண்டே இருவரையும் மற்றவர்கள் உதவியுடன் தனது வாகனத்தில் ஏற்றினார்.

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் (இடம்). படம்: விகடன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!