மசெக- சிஜக நேரடிப் போட்டி

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிக்கான இடைத்தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி புக்கிட் பாத்தோக்கில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மசெக சார்பில் 48 வயது திரு முரளிதரன் பிள்ளையும் சிஜக சார்பில் அதன் தலைவர் 53 வயது டாக்டர் சீ சூன் ஜுவானும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதையொட்டி, வேட்புமனுத் தாக்கல் நிலையமான கெமிங் தொடக்கப் பள்ளி முன்பாக அந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்ததை அடுத்து 12.30 மணியளவில் திரு முரளி, டாக்டர் சீ ஆகிய இருவரையும் வேட்பாளர் களாக அறிவித்தார் தேர்தல் அதிகாரி இங் வை சூங். பிறகு, அங்கிருந்தோரிடையே பேசிய திரு முரளி, "ஒன்றாக இணைந்து, புக்கிட் பாத்தோக்கை நம் எல்லாருக்குமான அழகான இடமாக உருவாக்குவோம். மசெகவிற்கு வாக்களியுங்கள். சிறந்த இல்லத்திற்கு வாக்களி யுங்கள். சிறந்த எதிர்காலத்திற்கு வாக்களியுங்கள்," என்று மலாய், ஆங்கில மொழிகளில் பேசினார். மாண்டரின் மற்றும் ஆங்கிலத் தில் பேசிய டாக்டர் சீ, தம்மை வெற்றி பெறச் செய்தால் முழு நேர நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவேன் என உறுதி அளித்தார். சிங்கப்பூரே பொறா மைகொள்ளும் அளவிற்கு புக்கிட் பாத்தோக்கை உருவாக்க விரும்பு வதாகவும் அவர் கூறினார்.

மசெக வேட்பாளர் முரளி பிள்ளையும் (வலது) சிஜகவின் டாக்டர் சீ சூன் ஜுவானும் நேற்று வேட்புமனுத் தாக்கல் மையத்தில் தங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். படம்: தேர்தல் துறை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!