பிரதமர்: பொருளியல் உருமாற்றம் உயிர்நாடி

சிங்கப்பூர் தன்னுடைய பொருளியலை உருமாற்றவேண்டிய அவசரப் பணியைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது மே தினச் செய்தியில் வலியுறுத்தி இருக் கிறார். அப்படிச் செய்தால்தான் ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வாழ்வில் மேம்பட அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றார் அவர். நல்ல வேலைகளைப் பெற ஊழியர்களை ஆயத்தப்படுத்துவதே பொருளியல் உருமாற்றத்தின் முக்கியமான இலக்காக தொடர்ந்து இருந்துவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

"சிங்கப்பூர் சரியான, பொருத்தமான வேலைகளைத் தொடர்ந்து வழங்குகிறது. நம்முடைய ஊழியர்களிடம் சரியான, பொருத்தமான தேர்ச்சிகள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதே பொரு ளியல் உருமாற்றத்தின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது," என்று பிரதமர் தெரிவித்தார். பொருளியல் உருமாற்றம் காரணமாக பல மாற்றங்கள் இடம் பெறும் என்றாலும் ஒன்று மட்டும் மாறவே மாறாது என்று திரு லீ கூறினார். இந்த அரசாங்கம் எப்பொழுதுமே ஊழியர்கள் பக்கமே இருந்து வரும். இது எப்பொழுதுமே மாறாது என்று திரு லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பொருளியல் சென்ற ஆண்டு 2.1% வளர்ந்தது. கடந்த 2009ல் நிதி நெருக்கடி எற்பட்டது முதல் சென்ற ஆண்டுதான் பொருளியல் மிக குறைந்த அளவிலான வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் தொகை மூப்படைவது, ஊழியர் பற்றாக்குறை நிலவுவது போன்ற பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, சீனாவில் வளர்ச்சி குறைந்துவிட்டதாலும் உலக அளவில் கடும்போட்டி நிலவுவதாலும் சிங்கப்பூருக்கு பல சவால்கள் ஏற்பட்டுள்ளதாக திரு லீ குறிப்பிட்டார். இவற்றின் காரணமாக சிங்கப்பூரின் பொருளியல் 2016ல் 1 முதல் 3% வரைதான் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!