சைக்கிளோட்டி, பாதசாரிகளுக்கான வசதிகளுடன் கட்டடத் திட்டங்கள்

சொத்து மேம்பாட்டாளர்கள் தங் களுடைய கட்டட வடிவமைப்பு களில் பாதசாரிகள், சைக்கிளோட் டிகள் ஆகியோருக்கு பாதுகாப் புடன் வசதிகளையும் சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. இதனை இவ்வாண்டின் ஜூலை யிலிருந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று சொத்து மேம்பாட் டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சைக்கிளோட்டிகள், பாதசாரி களுக்கான பாதுகாப்பு அம்சங் களை உறுதி செய்தல், சைக்கிள் நிறுத்துமிடங்கள், குளியல் அறை யுடன் பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்ற வசதிகளை சொத்து மேம் பாட்டாளர்கள் செய்ய வேண்டும். மேலும் முக்கிய போக்குவரவு முனையங்களிலிருந்து நடைபாதை, சைக்கிள் பாதைகள் இணைக்கப்பட வேண்டும். பாதசாரிகளும் சைக்கி ளோட்டிகளும் பாதுகாப்பாகக் கடந்து செல்லவும் அவர்களுக்கு கூரையுடன் கூடிய இணைப்புப் பாதைகளும் அமைக்க வேண்டும்.

நிலப்போக்குவரத்து ஆணை யமும் நகர சீரமைப்பு ஆணை யமும் கூட்டாக நேற்று இந்த விவ ரங்களை வெளியிட்டன. இவை, சைக்கிள், மின் ஆற்றலில் இயங்கும் ஸ்கூட்டர் போன்ற போக்குவரவு வாய்ப்புகளை மேம்படுத்தும் அரசாங்க முயற்சி களின் ஓர் அங்கமாக இடம்பெறு கின்றன. சொத்து மேம்பாட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய நடைபாதை, சைக்கிள் பாதைத் திட்டங்களால் எல்லாருக்கும் வசதியான, பாது காப்பான, நட்பான போக்குவரத்து சூழல் ஏற்படும் என்று கூட்டு அறிக்கையில் இரு அமைப்புகளும் குறிப்பிட்டன.

செங்காங்கில் அமைக்கப்பட்டுள்ள சைக்கிளோட்டிகளுக்கான வசதி. பாதசாரிகள், சைக்கிளோட்டிகளுக் கான வசதிகளுடன் கட்டடத் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொத்து மேம்பாட்டாளர்களு-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!