சிங்கப்பூர்- ஆஸி. உறவு மேலும் வலு

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் மிக முக்கிய உடன்பாட்டில் கை யெழுத்திட்டுள்ளன. இருநாட்டு உறவுகளை ஊக்குவிக்கும் அந்த உடன்பாடு, பாதுகாப்பு, வர்த்தகம், கலைகள், கலாசாரம் ஆகியவற்றில் இரு தரப்புகளும் மேலும் ஒத் துழைக்க வகை செய்கிறது. சிங்கப்பூர் துருப்புகள் ஆஸ்தி ரேலியாவில் மேலும் அதிக ராணு வப் பகுதிகளில் 25 ஆண்டு களுக்குப் பயிற்சி பெறுவதற்கு வகை செய்யும் தற்காப்பு ஒத் துழைப்பு உடன்பாடு, கையெழுத் தான உடன்பாடுகளில் ஒன்றாகும். இரு நாடுகளும் கையெழுத் திட்டுள்ள உடன்பாட்டை சிங்கப்பூர் அமைச்சர்கள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.

"சிங்கப்பூர் துருப்புகள் பயிற்சி பெற அதிக பயிற்சி வட்டாரங்கள் இருக்கும் என்பதால் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் இந்த வட்டாரத் தில் மிகவும் நன்கு பயிற்சி பெற்ற, ஆற்றல்மிக்க ராணுவங்களில் ஒன்றாகத் திகழும்," என்று தற் காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். "இரு தரப்புகளுக்கும் இடை யில் தற்காப்பு உடன்பாடு வலு வடைவது, இரு நாடுகளின் ராணு வங்களுக்கு இடைப்பட்ட நம்பிக் கையின் அளவைப் பிரதிபலிக் கிறது," என்று வெளியுறவு அமைச் சர் டாக்டர் விவியன் பாலகிருஷ் ணன் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், (வலது) ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டெர்ன்புல் இருவரும் சென்ற ஆண்டில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டில் சந்தித்தனர். "ஆஸ்திரேலியாவுடன் இந்த மிக முக்கிய உடன்பாடு கையெழுத்தாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உடன்பாடு இருதரப்புக்கும் வரும் பல ஆண்டுகளுக்கு நன்மை பயக்கும்," என்று திரு லீ அறிக்கையில் குறிப்பிட்டார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!