முரளி பிள்ளை இன்று பதவி ஏற்பு

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர் கள் தங்களது வாழ்க்கையை மேம் படுத்தும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை ஒருசில மாதங்களில் எதிர்பார்க்கலாம். புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் வாகை சூடிய முரளி பிள்ளை நேற்று இதனைத் தெரிவித்தார். “நாடாளுமன்றத்துக்கு முதல் முறை செல்வதால் எனக்கு இது ஒரு கற்றல் அனுபவமாக இருக்கும். சக மசெக நாடாளுமன்ற உறுப் பினர்களிடமிருந்து விரைவில் கற்றுக்கொண்டு என்னுடைய பங் களிப்பைத் தொகுதியில் சுறுசுறுப் புடன் தொடங்க விரும்புகிறேன்,” என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் திரு முரளி கூறினார். நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்க இருக்கும் 48 வயது வழக்கறிஞரான அவர், நேற்று முன்தினம் நடைபெற்ற இடைத் தேர்தலில் 61.21 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றியடைந் தார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தமது பணியைத் தொடங்க ஆர் வமுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு முரளி, தொகுதிக்கான தமது திட்டங்களுக்குப் பல்வேறு பங் காளிகளைக் கண்டறியும் பணி யில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். வேலைவாய்ப்புத் திட்டம், சுகா தாரக் கூட்டுறவுத் திட்டம், இளையர் வழி காட்டித் திட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய திட்டங்களை அவர் தமது தேர்தல் பிரசாரத்தின்போது பட்டியலிட்டிருந்தார். தமக்கு வெற்றி தேடித் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரி விக்கும் ஊர்வலத்தில் பங்கேற்ற திரு முரளி, தமக்கு அளிக்கப்பட்ட ஆதரவை நன்றியுடன் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார். தமது பிரசாரத்தின்போது முன்வைக்கப்பட்ட அம்சங்களை மேம்படுத்துவது குறித்துத் தாம் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி யின் சீ சூன் ஜுவானை வீழ்த்தி வாகை சூடியதன் மூலம் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தனித் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வெற்றிபெறும் முதல் மசெக வேட்பாளர் என்னும் பெருமையை திரு முரளி பெற்றுள்ளார்.

குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற திரு முரளி யுடன் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ, ஜூரோங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் ஆகியோரும் காணப்பட்டனர். வாக்கு விகிதம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த திரு ஆங் வெய் நெங், “இடைத்தேர்தல் என்பதால் வாக்கு கள் குறையக்கூடும் என்று கருதி னோம். 60 விழுக்காட்டு வாக்கு களைப் பெறுவோம் என்று எதிர் பார்த்தோம். ஆனால், அதை விட அதிகமாகக் கிடைத்ததால் மகிழ்ச்சியில் வியந்தோம். தேர்தல் முடிவு எங்களுக்கு மனநிறைவைத் தந்துள்ளது,” என்றார்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனித் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றி பெறும் முதல் மசெக வேட்பாளர் என்னும் பெருமையைப் பெற்றுள்ள முரளி பிள்ளை, தம்மை வெற்றி பெறச் செய்த புக்கிட் பாத்தோக் தொகுதி குடியிருப்பாளர்களுக்கு நேற்று நன்றி தெரிவித்துக்கொண்டார். திறந்த வேனில் மசெக பிரமுகர்கள் புடைசூழ வீதி வீதியாகச் சென்ற அவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று மக்கள் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா

படம்: தி நியூ பேப்பர்

19 Mar 2019

சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்