கடன்முதலை துன்புறுத்தல்: கைதான இரு இளையரிடம் சம்பவ இடத்தில் விசாரணை

கடன் முதலை துன்புறுத்தல் சம்பவம் ஒன்றில் குற்றம் சுமத் தப்பட்டுள்ள பதின்ம வயது இளையர்கள் இருவர் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றுக் காலை அழைத்துச் செல்லப்பட்டனர். கை, கால்களில் தடுப்பு பூட்டப் பட்ட அவ்விருவரும் லெங்கோக் பாருவில் உள்ள புளோக் 59ன் பத்தாவது மாடி வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சீ ஜியாஷெங், 16, சோங் ஷெங் வெய், 18, எனப்படும் அவர்கள் அந்த ஈரறை வீட்டின் வாயிற் கதவருகே நிறுத்தப்பட்டு சுமார் இரண்டு நிமிடங்கள் விசாரிக்கப் பட்டனர். இம்மாதம் முதல் தேதி அந்த வீட்டின் வாசலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீவைக்கப்பட்டது. திரு டான், 50, என்னும் சொத்து முகவர் தமது மனைவி மற்றும் 14 மாதக் குழந்தையுடன் இரு வாரங் களுக்கு முன்னர்தான் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கத் தொடங்கினார்.

இதற்கு முன்னர் அந்த வீட்டில் இருந்தோரைக் குறி வைத்துத் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றார் திரு டான். இரவில் படுக்கச் செல்லும் முன்னர், புகைகிற வாடை வீசி யதை உணர்ந்த அவர் கதவைத் திறந்து பார்த்தபோது நெருப்புப் பற்றி எரிவதைக் கண்டார். தண்ணீர் ஊற்றி அதனை அணைத்துவிட்டபோதிலும் அவ ரது குழந்தை புகையைச் சுவாசித் ததன் காரணமாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டது. குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இம்மாதம் 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட இரு இளையரின் மீதும் பணம் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் 6ஆம் தேதி குற்றம் சுமத்தப் பட்டது. இந்த இருவரும் ஏற்கெனவே ஹவ்காங் ஸ்திரீட் 51லும் செம் பவாங் டிரைவிலும் தீ வைத்து கடன் முதலை துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படு கிறது.

லெங்கோக் பாருவில் குற்றச் சம்பவம் நடந்த புளோக் 59ன் பத்தாவது மாடியிலுள்ள வீட்டின் முன் இரு பதின்ம வயது இளையரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!