ரயிலை மின்னல் தாக்கியதால் 50 நிமிடம் தடைப்பட்ட சேவை

சிங்கப்பூரின் வடக்கு தெற்கு ரயில் பாதையில் செல்லும் ரயில் ஒன்று நேற்று திடீரென்று ஏற்பட்ட இடியின் காரணமாக மின்னல் தாக்கியதாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் யீ‌ஷூன், இயோ சூ காங் எம்ஆர்டி நிலையங் களுக்கு இடையே பிற்பகல் 3.46 மணிக்கு நிகழ்ந்ததாக எஸ்எம் ஆர்டி நிறுவனத்தின் சார்பாக பேட்ரிக் நாதன் தெரிவித்தார். இதன் காரணமாக ரயிலில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறிய அவர், இயோ சூ காங் நிலையத்தை நோக்கிப் பயணம் செய்த பயணிகள் பாதிக் கப்பட்டதாகத் தெரிவித்தார். ரயிலில் திடீரென்று புகைகிற வாசனையை உணர்ந்த ரயில் ஓட்டுநர் அது குறித்துப் புகார் தெரிவித்ததாகத் தெரிகிறது.

பழுதடைந்து நின்றுவிட்ட ரயிலை மற்றொரு ரயில் தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் பாதையில் கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்குச் சேவை பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ரயில், சேவை யிலிருந்து அகற்றப்பட்டபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தண்டவாளப் பாதையில் உள்ள சாதனங்களை பொறியாளர் கள் சோதனை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக இச் சோதனை நடத்தப்பட்டதாகவும் திரு நாதன் தெரிவித்தார். ரயிலை மின்னல் தாக்குவது என்பது அரிதான சம்பவம்.

இருப்பினும் கடுமையாக இடி இடிக்கும் போது அதற்கு வாய்ப்பு உண்டு. நேற்றைய சம்பவத்தால் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப் பட்டது. யீ‌ஷூனுக்கும் இயோ சூ காங்குக்கும் இடைப்பட்ட பாதை யில் தடைபட்ட ரயில் சேவை மாலை 4.35மணிவாக்கில் வழக்க நிலைக்குத் திரும்பியதாக எஸ்எம் ஆர்டி கூறியது. கடுமையான வானிலையின் போதும் பயணிகளைப் பத்திர மாகப் பாதுகாக்கும் வகையில் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் அது குறிப்பிட்டது. ரயில் சேவை தடைப்பட்ட யீ‌ஷூன், காத்திப், இயோ சூ காங் ஆகிய எம்ஆர்டி நிலை யங்களுக்கு இடையே இலவசப் பேருந்து சேவை வழங்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி மேலும் தெரிவித் தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’